இப்படிலாம் சினிமாவுக்கு வர்றது சரியா! – லோகேஷை கேள்வி கேட்டு லாக் செய்த நடிகர் பிரசாந்த்..
தற்சமயம் ட்ரெண்டில் உள்ள இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். வெற்றிமாறன் மாதிரியே லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களை காணவும் ஒரு ரசிக பட்டாளம் உருவாகியுள்ளது. எனவே அதற்கு தகுந்தாற் போல அவரது சம்பளமும் அதிகரித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் அதிகப்பட்சம் சில படங்களில் உதவி இயக்குனர்களாக இருந்தால்தான் பிறகு இயக்குனராக முடியும். இயக்குனர் பாக்கியராஜ், பாண்டியராஜ், சங்கர், அட்லி, ஏ.ஆர் முருகதாஸ் இப்படி பலரும் உதவி இயக்குனர்களாக இருந்து வந்தவர்களே. ஆனால் லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனர் ஆகாமலே இயக்குனர் ஆனவர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் மூவரும் பல கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர். அப்போது நடிகர் பிரசாந்த் கேள்வி கேட்கும்போது ”இயக்குனர்கள் பலர் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராக சினிமாவிற்குள் வருகின்றனர். ஆனால் சிலர் குறும்படங்கள் மட்டும் எடுத்துவிட்டு திரைக்கு வருகின்றனர். இதில் எது சரி? என கேட்டிருந்தார்.
வெற்றிமாறனின் பதில்:
ஏனெனில் லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ் இருவருமே குறும்படங்கள் எடுத்துவிட்டு அதன் மூலம் வாய்ப்பு கிடைத்து தமிழ் சினிமாவிற்குள் வந்தவர்கள். இதற்கு வெற்றிமாறன் பதிலளிக்கும்போது “தமிழ் சினிமாவில் எப்போதுமே இது நடந்துள்ளது.
இதற்கு முன்னர் இருந்த பாலு மகேந்திரா, பாலசந்தர், மணிரத்னம், மகேந்திரன் ஹாலிவுட்டில் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல் பர்க் கூட உதவி இயக்குனராக இல்லாமல் சினிமாவிற்கு வந்தவர்கள்தான். அதனால் உதவி இயக்குனராக இருப்பதை வைத்து நாம் தரம் பிரிக்க முடியாது” என பதிலளித்துள்ளார்.