பிரசாந்த் மட்டும் நடிக்க வரலைன்னா என்னவா ஆகியிருப்பார் தெரியுமா?? நீங்க இதை கேள்விபட்டுருக்கவே மாட்டீங்க!!
தமிழ் சினிமா ரசிகர்களின் டாப் ஸ்டார் என்று புகழப்படும் பிரசாந்த், “வைகாசி பொறந்தாச்சு” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து “வண்ண வண்ண பூக்கள்”, “ஆணழகன்”, “ஜீன்ஸ்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார் பிரசாந்த்.
இளம் பெண்களின் மத்தியில் சாக்லேட் பாய் ஆக வலம் வந்த பிரசாந்த், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார். அஜித், விஜய் ஆகியோர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவர்களுக்கு நிகராக தனி டிராக் போட்டு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார் பிரசாந்த்.
எனினும் “வின்னர்” திரைப்படத்தை தொடர்ந்து பிரசாந்த் நடித்த பல திரைப்படங்கள் அவரது கேரியருக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. தொடர்ந்து அவர் நடித்து வெளிவந்த படங்கள் தோல்வியடைந்து வந்ததால் பிரசாந்த்தின் மார்க்கெட் சரிந்துகொண்டே வந்தது.
எனினும் தற்போது “அந்தகன்” என்ற திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க தயாராக இருக்கிறார் பிரசாந்த். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்கு முன்பே முடிவடைந்திருந்த நிலையில் விரைவில் இத்திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மீண்டும் பிரசாந்த்தை திரையில் பார்க்க ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரசாந்த்தின் தந்தையான இயக்குனர் தியாகராஜன், பிரசாந்த் சினிமாவில் நுழைந்தது குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டார்.
அதாவது தியாகராஜன் தனக்கு திருமணம் ஆன விஷயத்தையே யாரிடமும் கூறாமல் பல ஆண்டுகள் மறைத்து வைத்திருந்தாராம். ஒரு நாள் சத்யராஜ் தியாகராஜனின் வீட்டிற்கு வந்தார். 12 ஆம் வகுப்பு முடித்திருந்த பிரசாந்த் அப்போது வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தாராம்.
“தியாகராஜன் வீட்டில் இல்லையா?” என சத்யராஜ் கேட்க அதற்கு பிரசாந்த் “அப்பா, வெளில போயிருக்காங்க” என கூறியிருக்கிறார். “நீ தியாகராஜன் பையனா?” என அவர் கேட்க அதற்கு பிரசாந்த் “ஆமாம்” என பதிலளித்திருக்கிறார்.
தியாகராஜனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற தகவலையும் அவருக்கு ஒரு பையனும் இருக்கிறார் என்ற தகவலையும் சத்யராஜ் சினிமா துறையில் உள்ள பலருக்கும் சொல்லிவிட்டாராம். அதன் பின் பிரதாப் போத்தன், பாலுமகேந்திரா உட்பட பலரும் தியாகராஜனை சந்தித்து பிரசாந்த்தை நடிக்க வைக்கவேண்டும் என கூறினார்களாம்.
ஆனால் தியாகராஜனோ, “இல்லை, என் பையன் மெடிக்கல் படிக்கப்போறான். என்ட்ரன்ஸ் எழுதப்போறான். அவன் நடிக்க மாட்டான்” என கூறி திருப்பி அனுப்பிவைத்திருக்கிறார்.
எனினும் அவருக்கு தெரிந்தவர் ஒருவர் ஒரு ஜோசியரை அழைத்து வர அந்த ஜோசியரோ “பிரசாந்துக்கு படிப்பெல்லாம் செட் ஆகாது. அவர் வேற ஒரு துறையில் பெரிய ஆளா வருவார்” என கூறியிருக்கிறார். ஆனாலும் தியாகராஜனுக்கு மனம் மாறவில்லை.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய முதல் பரிசு இதுதானாம்… அப்படி அதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா??
பிரசாந்த் ஒரு வேளை மெடிக்கல் என்ட்ரன்ஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல் போனால் சினிமாவில் நடிக்க அனுப்பலாம் என முடிவெடுத்தார். ஆனால் பிரசாந்த்தோ மெடிக்கல் என்ட்ரென்ஸில் தேர்ச்சி பெற்றுவிட்டாராம். இன்னும் மூன்று மாதத்தில் கல்லூரியில் சேரவேண்டுமாம்.
அப்போது ஒரு தயாரிப்பாளர் மலையாளத்தில் எடுக்க இருந்த ஒரு படத்தில் பிரசாந்த்தை நடிக்க வைக்க வேண்டும் என தியாகராஜனை சந்தித்து கேட்டார். 18 நாட்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என கூறியிருக்கிறார். இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறதே, ஆதலால் இந்த படத்தில் பிரசாந்த் நடிக்கட்டும், எப்படியும் படம் நிச்சயமாக ஓடாது என நினைத்தாராம்.
ஆனால் படம் வெளியாகி சரியான ஹிட். அதன் பின் பாலு மகேந்திரா, தியாகராஜனை தொடர்புகொண்டு “உனக்கு நான் என்ன திரோகம் பண்ணேன்” என கூறி வருத்தப்பட்டாராம். அதன் பின்தான் பிரசாந்த் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கினாராம்.