90களிலேயே இன்டெர்நெட்டில் புகுந்து விளையாடி மிரள வைத்த பிரசாந்த்… அப்போவே அப்படி!!

Published on: February 4, 2023
Prashanth
---Advertisement---

1990களில் இளம் பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர் பிரசாந்த். அஜித், விஜய் ஆகிய நடிகர்கள் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் தனக்கென தனி டிராக் பிடித்து தனது வசீகரமான நடிப்பால் ரசிகர்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் இவர்.

Prashanth
Prashanth

பிரசாந்த் தமிழில் “வைகாசி பொறந்தாச்சு” என்ற திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அதன் பின் “செம்பருத்தி”, “கிழக்கே வரும் பாட்டு”, “”கண்மணி”, “ஆணழகன்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தார்.

எனினும் “ஜெய்”, “லண்டன்”, போன்ற திரைப்படங்களை தொடர்ந்து பிரசாந்த்தின் கேரியர் சரியத்தொடங்கியது. குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளில் வெளியான “சாகசம்”, “ஜானி” போன்ற திரைப்படங்கள் படுதோல்வி அடைந்தன.

Andhagan
Andhagan

இதனை தொடர்ந்து தற்போது “அந்தகன்” திரைப்படத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் பிரசாந்த் மீண்டும் கம்பேக் கொடுக்கவுள்ளார் என்பதால் பிரசாந்த் ரசிகர்கள் இத்திரைப்படத்திற்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் பிரசாந்த்தை குறித்த ஆச்சரியத்தக்க தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. அதாவது பிரசாந்த் 1990களிலேயே இன்டெர்நெட் குறித்து விளாவரியாக தெரிந்துவைத்திருந்தாராம். அப்போது இருந்த பத்திரிக்கையாளர்கள் பலருக்கும் அந்த காலகட்டத்தில் இருந்த “ஹாட் மெயில்” வலைத்தளத்தில் Email idக்களை உருவாக்கித் தருவாராம் பிரசாந்த்.

Prashanth
Prashanth

“இனி இன்டெர்நெட்தான் எதிர்காலமே” என்று பலரிடமம் கூறிக்கொண்டிருப்பாராம். 1999 ஆம் ஆண்டு “இன்தாம்” என்று ஒரு இணையத்தளப் பத்திரிக்கை இருந்ததாம். அப்போது இணையத்தளம் குறித்த எந்த ஒரு புரிதலும் இல்லாத காரணத்தால் நடிகர்கள் இணையத்தளத்திற்கெல்லாம் பேட்டிகள் கொடுக்கமாட்டார்களாம்.

ஆனால் “இன்தாம்” இணையத்தளத்திற்கு அப்போதே பிரசாந்த் பேட்டியளித்திருக்கிறாராம். மேலும் பிரசாந்த் அந்த காலகட்டத்திலேயே லேப்டாப் ஒன்று வைத்திருந்தாராம். செய்தி ஊடகத்திற்கு பிறகு இனி வருங்காலத்தில் இணையத்தளங்கள்தான் உலகை ஆளப்போகிறது என அப்போதே கூறினாராம். இவ்வாறு வருங்காலத்தை குறித்து அன்றே கணித்திருக்கிறார் பிரசாந்த்.

இதையும் படிங்க: அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த அந்த தருணம் வந்துவிட்டது… என்னன்னு தெரிஞ்சா அசந்துப்போய்டுவீங்க!!

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.