எனக்கு கிடைத்த மற்றொரு தாய்… பெண் குழந்தைக்கு அப்பாவான விஜய் டிவி புகழ்… இன்ஸ்டாவில் பகிர்ந்த உருக்கமான பதிவு…

விஜய் டிவியின் குக் வித் கோமாளி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் புகழ். இவர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னதிரையில் அறிமுகமானார். பின் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தனது காமெடியான கதாபாத்திரத்தை உலகிற்கு வெளிகாட்டினார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தர்ஷா, பாலா போன்றவர்களுடன் இவர் அடிக்கும் அரட்டை மக்களை பெரிதும் கவர்ந்தது. இவர் கடந்த ஆண்டு தனது சிறுவயது தோழியான பென்சியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு சினிமா மற்றும் சின்னதுறையில் உள்ள பல நட்சத்திரங்களும் வந்து வாழ்த்தினர். மேலும் இவர் சமீபத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் வாசிங்க:மணிரத்னத்தின் ஹிட் படத்தில் நடிக்க இருந்த நதியா… ஜஸ்ட்டு மிஸ்சு..! என்ன படம் தெரியுமா?

கைதி, யானை, வலிமை போன்ற பல திரைப்படகளின் மூலம் சினிமாவிலும் வலம் வர ஆரம்பித்தார். மேலும் Mr.Zoo Keeper திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தின் படபிடிப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இவரது மனைவி சமீபத்தில் கருவுற்றிருந்த நிலையில் சமீபத்தில் இவர்களின் வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது. பல பிரபலங்களும் இதற்கு வந்து வாழ்த்துகளை தெரிவித்தனர். தற்போது இவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

pugazh baby

pugazh baby

இதையும் வாசிங்க:பண்ணது தப்புதான்!.. ப்ளிஸ் யாராவது எனக்கு உதவி பண்ணுங்க!.. கூல் சுரேஷ் நிலமைய பாருங்க!..

இதனை தந்து இன்ஸ்டாகிராமில் புகழ் பதிவிட்டுள்ளார். “இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்…மகள் அல்ல, எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள்… தாயும் சேயும் நலம்…” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களின் வாழ்த்துகளை குவித்து வருகிறது.

இதோ உங்களுக்காக அந்த பதிவு: https://www.instagram.com/p/CxsjkSsxAdo/?igshid=MzRlODBiNWFlZA==

 

Related Articles

Next Story