காமெடிங்கிற பேர்ல மொக்க பண்ணிட்டு.....ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளான விஜய்டிவி பிரபலம்....!

by Rohini |
pugazh_main_cine
X

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியால் தான் ஓரளவிற்கு விஜய் டிவியின் டிஆர்பி உயரத்தில் இருக்கிறது என்று கூறலாம். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் அலப்பறைகள் சொல்லிமாளாது. அந்த அளவுக்கு கோமாளி போன்றே கிறுக்குத்தனமான வேலைகளை செய்து மக்களை ரசிக்க வைப்பார்கள்.

pugazh1_cine

இப்போது மூன்றாவது சீசன் நடந்து கொண்டிருக்கையில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட கோமாளிகளால் தான் இன்னும் இந்த நிகழ்ச்சி வளர்ச்சி பெற்றது என சொல்லலாம். முக்கியமாக புகழ், சிவாங்கி, மணிமேகலை, சுனிதா இவர்கள் செய்யும் லூட்டிகள் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும். அந்த வகையில் மிகவும் பிரபலமானார் புகழ்.

இதையும் படிங்கள் : சைனிங் கன்னத்துல சரண்டர் ஆயிட்டோம்!…ஒத்த போட்டோவில் ஓரங்கட்டிய நடிகை தேஜு அஸ்வினி…

வடிவேலு, விவேக் ஆகியோர் தன் காமெடியால் பிரபலமானார்களோ அந்த அளவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கினார் தன்னுடைய அனல் பறிக்கும் காமெடியால் . இந்த திறமைக்கு கிடைத்த பரிசுதான் அவர் வெள்ளித்திரை வரை அழைக்கப்பட்டார். சந்தானம் உடன் இணைந்து சபாபதி என்ற படத்தில் நடித்தார். என்ன சொல்ல போகிறாய், அஜித்தின் வலிமை போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் விஜய் டிவியில் கிடைத்த பெருமை வெள்ளித்திரையில் கிடைக்கவில்லை. படம் முழுக்க வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வலிமை படத்தில் ஒரே ஒரு சீனில் மட்டும் வந்து நடித்திருப்பார்.

pugazh2_cine

மேலும் அவரின் காமெடி முன்பு மாதிரி இல்லை என்று ரசிகர்கள் வருத்தப்படுவது சமூக வலைதளங்கள் மூலம் பார்க்கப்படுகிறது. ஏகப்பட்ட கமென்ட்களை தங்கள் வருத்தங்களின் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர். காமெடி மட்டுமே பண்ணுங்க, மொக்க போடாதீங்கனு இந்த மாதிரியான பதிவுகளை தான் கூறிவருகின்றனர். மேலும் குக் வித் கோமாளி சீசன் 3ல் அவர் இல்லை என்றாலும் கெஸ்ட் ரோலில் வந்து போட்டியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது கூட ரசிகர்கள் கூறியவாறு முன்பு மாதிரி அந்த பவர் ஃபுல்லான காமெடி அவரிடம் தென்படுவது இல்லை என்றே கூறலாம்.

Next Story