இந்த தடவையும் பல்பா?.. 1947 படத்தில் மொக்க வாங்கிய கௌதம்.. மொத்த பாராட்டையும் தட்டிச் சென்ற அந்த ஒரு பிரபலம்..
தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார் நடிகர் கௌதம் கார்த்திக். அப்பா எப்பேற்பட்ட நடிகர். ஆனால் கௌதம் கார்த்திக் இன்னும் தன் இடத்தை பிடிக்க போராடிக் கொண்டு வருகிறார். நடிகர் கார்த்திக் அந்த காலங்களில் பெண் ரசிகைகள், சினிமா நடிகைகள் என அனைவரையும் கொள்ளை கொண்டவராக
விளங்கினார்.
இப்போது கார்த்திக்கை பார்த்தால் கூட பிரமித்து பார்க்கும் நடிகைகள் ஏராளம். நடிகை குஷ்பூ கூட தனக்கு பிடித்த நடிகர் கார்த்திக் தான் என்று கூறுவார். அதுமட்டுமில்லாமல் சில நடிகைகளின் மானசீக காதலனாக கூட இருந்திருக்கிறார் கார்த்திக். ஆனால் கார்த்திக் தன்னுடன் நடித்த ராகினி என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அப்பாவின் புகழை ஓரளவிற்காக காப்பாற்ற வேண்டும் என்று கௌதம் கார்த்திக் போராடி வருகிறார். இருந்தாலும் அவர் நடித்த எந்த படங்களும் மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு ரீச் ஆகவில்லை. இந்த நிலையில் கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து உருவான படம் தான் ‘பத்து தல’.
ஆனால் இடையில் சிம்பு கெஸ்ட் ரோல் என்ற பெயரில் ஒட்டுமொத்த பாராட்டையும் தட்டிச் சென்று விட்டார். கௌதம் கார்த்திக் தான் கேமியோ என்பது போல அவர் நிலைமை ஆகிவிட்டது. ஆடியோ லாஞ்சிலிருந்து படம் வெளியாகும் வரை அனைவரும்
சிம்புவின் புராணத்தையே பாடிக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் சமீபத்தில் வெளியான 1947 என்ற படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுதந்திரம் கிடைத்தது கூட தெரியாமல் ஒரு கிராமம் படும் அவஸ்தையை பற்றிய படமாக 1947 என்ற படம் அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் தான் ஹீரோ என்றாலும் அனைத்து பாராட்டையும் அள்ளிச் சென்றவர் விஜய் டிவி புகழ்.
இந்தப் படத்தில் காமெடியை முழுவதுமாக மறைத்துக் கொண்டு ஒரு சீரியஸான குணச்சித்திர நடிகர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். ஆங்கிலேயர்களால் தன் நாக்கு அறுபட சுதந்திரம் கிடைத்ததை எப்படியாவது தன் கிராமத்தில் சொல்ல வேண்டும் என்று புகழ் படும் கஷ்டம், அதை திரையில் பார்க்கும் அனைவரும் கண்களில் நீர் ததும்ப பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த அளவுக்கு புகழின் நடிப்பு பேசப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : நான் விரும்பிய இரண்டே நடிகைகள்!.. நடந்ததை எண்ணி மன்னிப்பு கேட்ட ரஜினி!.. இப்படி ஒரு ப்ளாஸ்பேக்கா?..