விஜயகாந்த் படம் பார்த்தாலே நான் அழுதிடுவேன்!.. பல நினைவுகள்!. ஃபீலிங்ஸ் காட்டும் நடிகர்!..
Vijayakanth: படப்பிடிப்பிலும் சரி.. ஷூட்டிங் முடிந்த பின்னரும் சரி.. எப்போதும் நண்பர்கள் புடை சூழ இருந்தவர்தான் விஜயகாந்த். ஏனெனில் நட்புக்கு அவர் கொடுத்த முக்கியத்தும் அப்படி. அவர் எல்லோருடன் நன்றாக பழகினாலும் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர், தியாகு, பாண்டியன், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர்தான்.
எந்த விழாவுக்கு போனாலும் இவர்கள் இல்லாமல் போகமாட்டார் விஜயகாந்த். அதேபோல் படப்பிடிப்பு முடிந்தபின் அவர் நேரம் செலவழித்தது அவர்களோடுதான். சீட்டு விளையாடுவது கூட அவர்களோடுதான். ஆனால், திருமணத்திற்கு பின் அந்த நெருக்கம் குறைந்து போனது.
இதையும் படிங்க: இளையராஜாவை பார்த்து மிரண்டு போன ஜெயலலிதா! அம்மாவுக்கே ஜெர்க் காட்டிய இசைஞானி
விஜயகாந்தை சந்திக்க வேண்டுமெனில் பிரேமலதாவிடம் அனுமதி வாங்க வேண்டும் என்கிற நிலைமை வரவே ராதாரவி, தியாகு போன்றவர்கள் விஜயகாந்திடமிருந்து விலகி இருந்தனர். விஜயகாந்துடன் பல திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகர் ராதாரவி. இவரும் விஜயகாந்தும் ‘வாடா போடா’ நண்பர்கள்.
விஜயகாந்தின் பல படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார் ராதாரவி. விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சினிமா மற்றும் அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் இருந்தபோது அவரை ராதாரவி போய் சந்திக்கவில்லை. அவர் பலமுறை அனுமதி கேட்டும் பிரேமலதா அனுமதி கொடுக்கவில்லை. தற்போது விஜயகாந்த் இறந்தும் போய்விட்டார்.
இதையும் படிங்க: உங்க பொண்ணு ஒழுங்கா? ஷகீலா கேட்ட கேள்வியில் வெட்கி தலைகுனிந்த பயில்வான்!. செம பஞ்சாயத்து!..
இந்த நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ராதாரவி ‘விஜயகாந்தை கடைசி வரை பார்க்க முடியவில்லை. ஒருகட்டத்தில் ‘எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிவிட்டானே.. அவனை பார்க்க வேண்டாம்’ என நானே முடிவெடுத்து விட்டேன். அவனை அந்த நிலையில் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.
‘நடிகர் சங்கத்துக்கு தலைவராக வா’ என அவனை நான்தான் அழைத்தேன். ‘என்னோடு நீ இருப்பாயா?’ என கேட்டான். நான் கமிட்டியில் இருக்கிறேன் என சொன்னேன். டிவியில் விஜயகாந்த் படம் போட்டால் பார்த்துவிட்டு என் அறைக்கு போய் அழுவேன். அவனுடன் எனக்கு பல இனிமையான நினைவுகள்’ என மனமுடைந்து பேசினார் ராதாரவி.
COPYRIGHT 2024
Powered By Blinkcms