இத்தனை மனைவிகளா?.. தன் அப்பாவை பற்றி புட்டு புட்டு வைக்கும் ராதாரவி!.. இவ்ளோ ஓப்பனாவா பேசுறது?..

by Rohini |   ( Updated:2023-04-17 02:52:17  )
radha
X

radha

தமிழ் சினிமாவில் கேரக்டர் ரோலுக்கு சரியான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய நடிகராக வலம் வருபவர் நடிகர் ராதாரவி. பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்து ரசிகர்களை ஈர்த்தவர். நாடக மேடையில் தன் நடிப்பை ஆரம்பித்து சினிமாவில் கொடி கட்டிப் பறப்பவர்.

ராதாரவியின் பின்புலம் மிகவும் தரமானது. அதற்கு காரணம் அவரது தந்தை நடிகவேள் எம்.ஆர்.ராதா. எப்படி நடிப்பிற்கு சிவாஜியை உதாரணமாக கூறுகிறோமோ அந்த வகையில் எம்.ஆர்.ராதாவையும் நாம் கொண்டாடத்தான் வேண்டும்.

படத்தில் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறியிருப்பார். அதோடு கர்ஜனை செய்யும் குரலோடு அவர் பேசும் வசனங்கள் நம் மனதில் ஆழமாக பதிந்து விடும். சீர்த்தக் கருத்துக்களை படத்தில் அவர் சொல்லும் விதம் நகைச்சுவையோடு நம் புத்தியில் ஏறும் வகையில் அமையும்.

பெரியாரின் கருத்துக்களை ஏற்பவர் எம்.ஆர்.ராதா. என்ன சொன்னாலும் பதிலுக்கு சரியான விதத்தில் கவுண்டர் கொடுக்கும் மனிதர். மொத்தத்தில் மூட நம்பிக்கைகளை களைபவர் எம்.ஆர்.ராதா.அதை அவர் படத்தில் பெரும்பாலும் நாம் பார்க்கலாம்.

கோயிலில் சாமி கும்பிடுவதாகட்டும், பூனை குறுக்கே போனால் தடங்கல் என நினைக்கும் மக்களாகட்டும் இவர்கள் ராதாவிடம் மாட்டினால் அவ்ளோதான். அவர்கள் பாடு திண்டாட்டம் தான். அதை நிறைய படங்களில் நகைச்சுவையோடு விவரித்திருக்கிறார். இந்த நிலையில் தன் தந்தையை பற்றி ராதாரவி ஒரு பேட்டியின் போது கூறினார்.

அதாவது ‘என் அப்பாவுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு உண்டு. ஆனால் எல்லாருக்கும் அங்கீகாரம் கொடுத்திருப்பார். திருமதி எம்.ஆர்.ராதா என்றுதான் அங்கீகாரம் இருக்கும். அவர்கள் எல்லாருக்கும் தனித்தனியாக வீடு, முகவரி என அனைத்தையும் செய்திருக்கிறார். அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் எல்லாம் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் தான் படித்திருக்கிறோம்.

ஆனால் அது ராதிகாவிற்கு நியாபகம் இல்லை, நிரோஷா சரியாக அதை சொல்வாள், இந்த யூடியூப்பர்ஸ்லாம் அவர்கள் வீடியோவில் போடுகிறார்கள், என் அப்பாவுக்கு 5 மனைவிகள் என்று, ஆனால் அது மிகவும் குறைவு தான். இன்னும் இருக்கு’ என்று மிகவும்
வெளிப்படையாக பேசினார்.

இதையும் படிங்க : இந்த பாட்டு மக்களுக்கு புரியவே கூடாது-பாடலாசிரியருக்கு கண்டிஷன் போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்…

Next Story