விஜய்கிட்ட இத எதிர்பார்க்கவே இல்ல.. மூத்த நடிகருக்கே இப்படி ஒரு நிலைமையா?
Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இன்று தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக இருக்கும் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றார்கள்.
இன்னொரு பக்கம் அரசியலிலும் தான் யார் என்பதை நிரூபிக்க காத்துக் கொண்டிருக்கிறார் விஜய். இந்த நிலையில் நடிகர் விஜய்யை பற்றி ராதாரவி கூறிய ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. விஜயுடன் சர்க்கார் படத்தில் ராதாரவி நடித்திருந்தார். ராதாரவியின் பேரன் விஜயின் தீவிர ரசிகராம்.
இதையும் படிங்க: இவர் இல்லைனா சந்தானம் இல்ல.. ஆனா கடைசில அந்த நடிகருக்கு ஏற்பட்ட நிலைமை?
அதனால் விஜயை பார்க்க வேண்டும் என கூறினாராம் ராதாரவியின் பேரன். அவர் சிறுவயதில் இருந்து விஜயின் மிகப்பெரிய ரசிகர் என ராதாரவி கூறினார். அதனால் சர்க்கார் படத்தின் சமயத்தில் குடும்பத்துடன் விஜயை பார்க்க அழைத்து சென்று இருக்கிறார் ராதாரவி. ஆனால் விஜய் இப்போது மேக்கப்புடன் இருக்கிறார். மேக்கப்புடன் யாருக்கும் போஸ் கொடுக்க மாட்டார் என சொல்லி விட்டார்களாம்.
உடனே ராதாரவி சரி வேண்டாம் என நினைக்க இருந்தாலும் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு போனதால் காத்திருந்து விஜயுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டாராம் ராதாரவி. அதன் பிறகு சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது ராதாரவிக்கு ஒரு சின்ன மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: படத்தில அவருக்கே கிசுகிசு போட்ருக்கேன்… ஓபனாக சொன்ன தனுஷ்… வன்மத்த தீத்துக்கிட்டாரோ…
அவர் இருக்கையிலேயே சறுக்கிவிழ விஜய் ஓடி வந்து அவரை ஆசுவாசப்படுத்தி அமர வைத்திருக்கிறார். சரி விஜய்க்கு ஒரு நன்றி சொல்லலாம் என போன் செய்திருக்கிறார். அப்போது விஜயின் உதவியாளர் போனை எடுத்திருக்கிறார். அப்போது ராதாரவி விஜய்க்கு நன்றி சொல்ல வேண்டும் .எப்போது வரலாம் என கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த உதவியாளர் சரி வாருங்கள். ஆனால் வரும்போது கூட்டத்தோடு வராதீர்கள் கூறினாராம். உடனே ராதாரவி சரி அவர்கிட்ட நான் வரலைன்னு சொல்லிடு என சொல்லி போனை வைத்து விட்டாராம். இதைப்பற்றி கூறிய ராதாரவி ‘ அப்படி என்ன கூட்டம்? என் குடும்பம் தானே. இது கூட்டம் இல்லையே. அதனால் அவரை பார்க்க நான் போகவே இல்லை’ என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் ராதாரவி.
இதையும் படிங்க: வெற்றிமாறனால் சூர்யா, ஷங்கருக்கு வந்த இடியாப்ப சிக்கல்?