இதுக்கு அவர நேரடியாவே திட்டிருவேன்.. அத மட்டும் செய்யமாட்டேன்!.. ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த ரகுவரன்!..
தமிழ் சினிமாவில் நம்பியாருக்கு அடுத்தப்படியாக அனைவரையும் தன் வில்லத்தனமான நடிப்பால் கதற வைத்த நடிகர் யாரென்றால் அது நடிகர் ரகுவரன் தான். வில்லன் மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகராக, ஒரு நல்ல அப்பாவாக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக நடித்துக் கொடுப்பவர் நடிகர் ரகுவரன்.
ஆரம்பகாலங்களில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் முதல்வன் மற்றும் பாட்ஷா போன்ற படங்களில் வெளிப்பட்ட அவர் கதாபாத்திரம் இன்று நினைக்கும் போது கூட கலங்க வைக்கிறது. அந்த அளவுக்கு அவருடைய வில்லத்தனமான நடிப்பு மிரள வைத்துவிட்டது.
இதையும் படிங்க : எம்.ஜிஆரிடம் செம டோஸ் வாங்கிய பிரபல இசையமைப்பாளர்… அய்யா மன்னிச்சிடுங்கனு கையெடுத்து கும்பிட்டதால் விட்டாராம்…
கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்த ரகுவரன் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிப் படங்களிலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரகுவரன் தமிழில் அறிமுகமான படம் ‘ஏழாவது மனிதன்’. கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் போன்றப் படங்களில் ஹீரோவாக நடித்தார்.
ஆனாலும் ரசிகர்கள் அவரை வில்லனாக மட்டுமே ரசிக்க ஆசைப்பட்டனர். சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் தன்னுடைய அழகான குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தினார்.ரஜினியே ஒரு சமயம் ‘என்னுடன் நடித்த வில்லன்களில் எனக்கு பிடித்த இரண்டே வில்லன்கள்’ என்று ரகுவரனையும் நடிகை ரம்யா கிருஷ்ணனையும் குறிப்பிட்டு சொல்லியிருப்பார்.
பாட்ஷா, முத்து, அருணாச்சலம் போன்ற படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்திருப்பார். ஒரு வில்லன் நடிகரை அந்த அளவுக்கு திரையில் மக்கள் ரசித்தார்கள் என்றால் அது ரகுவரனாகத்தான் இருக்கும். எல்லாருக்கும் பிடித்தமான வில்லனாக திகழ்ந்தார். ஆனால் சில காலங்களுக்கு பிறகு போதைக்கு அடிமையாகி விட்டு எந்நேரமும் குடியிலேயே இருந்தார்.
இதையும் படிங்க : “கேரளாவில் விஜய்க்கு அம்புட்டு ரசிகர்கள்.. ஆனால்??’… தளபதி மலையாள படத்தில் நடிக்காததற்கான காரணம் என்ன தெரியுமா??
ஆனால் இது தவறு என்று உணர்ந்து ரகுவரன் பாபா மீது அதிக ஆர்வம் கொண்டவர். பாபா சாமியை மிகவும் விரும்புபவர். அதனால் புட்டபர்தி பாபாவை நினைத்து விரதம் இருந்து அதன் மூலம் குடியை விட்டு விடலாம் என எண்ணினார். அதனால் விரதமும் இருக்க தொடங்கினார்.
அந்த நேரத்தில் தான் ரஜினியின் பாபா படத்தில் வில்லனாக நடிக்க ரகுவரனுக்கு அழைப்பு வந்தது. ரகுவரனும் சம்மதித்திருக்கிறார். அதில் ரஜினி பாபா பக்தர் போல் நடித்திருப்பார். ரஜினியின் வில்லனாக என்றால் ஒரு காட்சியில் ‘ரஜினியை பார்த்து பாபா உன்ன கொல்லாமல் விட மாட்டேன்’ என்ற வசனத்தை ரகுவரன் பேசியாக வேண்டும்.
ஆனால் பாபாவுக்காக விரதமிருக்கும் ரகுவரன் இந்த வசனத்தை என்னால் பேசமுடியாது. இது பாபாவுக்கு எதிரான செயலாகும் என்று நினைத்து படத்தில் இருந்து விலகி விட்டாராம்.