'குட் பேட் அக்லி' செட்டில் அஜித்தை பெயரை சொல்லி அழைத்த நடிகர்.. அடுத்து நடந்த சம்பவம்..!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. அஜித் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படம் இது. அதற்கு காரணம் டீசர் மற்றும் டிரெய்லரில் இடம் பெற்றிருந்த காட்சிகள்தான். பில்லா, மங்காத்தா படத்திற்கு பின் அஜித்தை மிகவும் மாஸாக காட்டியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனரானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன்பின் அவர் இயக்கிய சில படங்கள் ஓடவில்லை. சிம்புவை வைத்து இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படமும் அவர் நினைத்தபடி உருவாகவில்லை. அதன்பின் சில மொக்கை படங்களை இயக்கினார். நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபோது அஜித்துடன் பழக்கம் ஏற்பட்டது. ‘ஒரு நல்ல படம் பண்ணிட்டு வா. நாம சேர்ந்து படம் பண்ணுவோம்’ என அஜித் சொல்ல அதே உற்சாகத்தில் ஆதிக் இயக்கிய படம்தான் மார்க் ஆண்டனி. இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்க இப்போது குட் பேட் அக்லி சாத்தியமாகி இருக்கிறது. பக்கா ஆக்ஷன் கேங்ஸ்டர் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் திரிஷா, அர்ஜூன் தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் நாளை காலை 9 மணிக்கு இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. எனவே, இப்படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். எனவே, ஆன்லைன் புக்கிங்கும் களைகட்டி வருகிறது. ஆன்லைன் புக்கிங் படி 100 கோடி வசூலை சில நாட்களிலேயே குட் பேட் அக்லி தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர்களில் ஒருவர் ரகுராம் செட்டில் நடந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் இரட்டை வில்லனாக நடித்தவர் இந்த ரகுராம். தற்போது அடுத்த தமிழ் படமாக குட் பேட் அக்லி நடித்துள்ளார். இதற்கான புரோமோஷன் பேட்டியில், அஜித்துடன் செட்டில் நடந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
அதன்படி, பாலிவுட் வரவான ரகுராம், பாலிவுட் கலாச்சாரத்தின்படி நடிகர்களை பெயர் சொல்லி அழைப்பது வாடிக்கையாம். அங்கு அப்படி தான் நடிகர்களை அழைத்து வந்துள்ளார். அதே நினைப்பில், இங்கும் வந்து குட் பேட் அக்லி படப்பிடிப்பு செட்டில் நடிகர் அஜித்தை பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். அஜித்தை பெயர் சொல்லி அழைக்க அவரிடமே கேட்டுள்ளார். அஜித்தும் அதற்கு ஓகே சொல்ல மிஸ்டர் அஜித் என்று பெயரை சொல்லி அழைத்துள்ளார்.
அஜித்திற்கு இதில் பிரச்சினை இல்லை என்றாலும், ரகுராம் ஒவ்வொரு முறையும் அஜித்தை பெயர் சொல்லி அழைக்கும்போது மொத்த செட்டும் அமைதியாகிவிடுமாம். செட்டில் இருந்த வேலையாட்கள் அனைவரும் சைலன்ட் மோடுக்கு சென்று, ரகுராமை மிரட்சியுடன் பார்த்துள்ளனர். இதையடுத்து அஜித்தின் பவரை புரிந்துகொண்ட ரகுராம், அவரை மீண்டும் அஜித் சார் என்று அழைத்தாராம்.