ரகுமானை டின்னருக்கு அழைத்த ரசிகை! போன இடத்தில் காத்திருந்த அதிர்ச்சி - இப்படியும் இருப்பாங்களா?

by Rohini |   ( Updated:2023-10-14 14:22:14  )
rahman
X

rahman

Rahman: தமிழில் புதுபுது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் ரகுமான். ஆனால் மலையாளப் படம் ஒன்றில் தான் இவரின் சினிமா அறிமுகம் ஆரம்பமானது. தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

முதல் படத்திலேயே மக்கள் மனதை வென்றவர் நடிகர் ரகுமான். 80 மற்றும் 90களில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தார். தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரகுமான் அவருடைய திருமணத்தை பற்றியும் மனைவியை பற்றியும் சில சுவாரஸ்ய சம்பவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். பிரபல இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவியின் தங்கையைத்தான் ரகுமான் திருமணம் செய்திருக்கிறாராம்.

ஒரு நிகழ்ச்சியில் பார்த்த போதே திருமணம் செய்தால் இவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என நினைத்தவர் நினைத்தவாறே கல்யாணம் செய்திருக்கிறார். தன் மனைவி எப்படி தன்னை புரிந்து கொண்டு நடக்கிறார் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறினார்.

ஒரு சமயம் ஸ்ரீலங்காவில் படப்பிடிப்பிற்கு சென்றிருந்தாராம் ரகுமான். அங்கு ஒரு தீவிர ரசிகை இருந்தாராம். அந்த ரசிகை எப்படியாவது ரகுமானை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த ஆசையை அவர் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார். உடனே அந்த ரசிகையின் பெற்றோரும் ரகுமானை வந்து பார்த்து தனது மகளின் ஆசையை கூறினார்களாம்.

ஒரு நாள் அந்த ரசிகையின் வீட்டிற்கு இரவு விருந்துக்கு சென்றாராம். போனதும் ரகுமானுக்கு ஒரே அதிர்ச்சியாம். பாத்ரூமிலிருந்து வீடு முழுவதும் ரகுமானின் புகைப்படங்களைத்தான் ஒட்டி வைத்திருந்தாராம். அதுமட்டுமில்லாமல் ரகுமானை பார்க்கும் வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற முடிவிலும் இருந்தாராம்.

அதன் பிறகுதான் அந்த ரசிகை ரகுமான் சொல்லி திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.இந்த ரசிகைக்கு நாம் எதாவது செய்ய வேண்டும் என தன் மனைவியிடம் சொல்ல ரகுமானுக்கு பிறந்த குழந்தைக்கு அந்த ரசிகையின் பெயரை வைத்தார்களாம்.

அதே போல் அந்த ரசிகையும் திருமணம் செய்து அவருக்கு பிறந்த குழந்தைக்கு ரகுமானின் பெயரை வைத்தாராம். இதை ஒரு நேர்காணலில் ரகுமான் கூறினார்.

Next Story