Connect with us
MRR 1

Cinema History

எம்.ஆர்.ராதாவுக்கு விக் வைக்கிறது உலக மகா சாதனை… 52 தடவை ஜெயிலுக்குப் போன நடிகவேள்!

தமிழ்த்திரை உலகில் ஒரு வித்தியாசமான நடிகர் எம்.ஆர்.ராதா. இவரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. நாத்திகனான இவர் ஆத்திகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். நடிப்பு என்று வந்து விட்டால் இவர் எதையும் பார்ப்பதில்லை. ஒரு முறை நடிகர் ராஜேஷ் ‘நடிகவேள்’ என்று அழைக்கப்படும் எம்.ஆர்.ராதாவைப் பற்றி அவரது மகன் ராதாரவியிடம் பேட்டி எடுத்தார்.

இதையும் படிங்க… ரஜினி பட வசூலை வைத்து எடுத்த அஜித்தின் சூப்பர் ஹிட் படம்!.. சூப்பர்ஸ்டார்னா சும்மாவா?!…

கலைவாணருக்கும், ராதாரவிக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு என்று சொன்னார். இருவருக்கும் ஒரே ஹேர் ஸ்டைல், ஒரே இயல்பான நடிப்பு. ஒரே மாதிரியான சிரிப்பு. ஒரு தடவை கலைவாணரே ராதாரவியின் நடிப்பைப் பார்த்ததும், ‘நான் சினிமாவுல இருக்குற வரைக்கும் நீ வராதேடா’ன்னு சொன்னாராம். அப்புறம் ராதாரவியும் விட்டுக்கொடுத்த ரொம்ப நாளா நடிக்காம இருந்தாராம். ராஜசேகரன் படத்தோட ஒதுங்கினாரு. ரத்தக்கண்ணீர் தான் அப்புறம். அப்போ கலைவாணருக்கு பேரு இல்ல. 2 பேரும் ஜெயிலுக்குப் போனதுலயும் ஒற்றுமை இருக்கு.

‘எங்க அய்யா 52 தடவை அரெஸ்ட் ஆயிருக்காரு. ஒரு தடவை வந்து எம்ஜிஆரை சுட்டது’ என்றார் ராதாரவி. ‘நான் அப்பாவோட ‘பாவமன்னிப்பு’ மாதிரியான படங்கள் எல்லாம் பார்த்தால் அழுதுகிட்டே இருப்பேன். அதனால தான் பார்க்குறது இல்ல’ என்கிறார் ராதாரவி.

‘டைரக்டர் மகேந்திரனின் அப்பா அடிக்கடி சொல்வார். உலகத்துலயே பெரிய நடிகர் எம்.ஆர்.ராதா தான். அவரு சொன்னது மாதிரி ராதா அண்ணனைப் பற்றி படிச்சேன். வெளிநாடுகளில் சென்று படித்தேன். இன்றைக்கு நான் ஓரளவு வாழ்கிறேன் என்றால் அதில் பெரும்பங்கு எம்.ஆர்.ராதா அண்ணன் உடையது. அவருடன் சில படங்கள் நடித்தும் இருக்கிறேன்’ என்றார் நடிகர் ராஜேஷ்.

அப்போது ராதாரவி சொன்ன விஷயங்கள் சுவாரசியமானவை. என்னன்னு பார்ப்போமா…

RK

RK

அப்போது படிக்காத ஒரு மனிதன் ஹாலிவுட் அளவுக்கு எப்படி நடித்தார்? இங்கிலீஷ் படம் பார்ப்பாரான்னு ராஜேஷ் கேட்டார். ஒண்ணுமே பார்க்க மாட்டார்னு ராதாரவி சொன்னார். அப்புறம் எப்படி ஹெரால்டு பிலிம் மாதிரி ஹேர் ஸ்டைல், தொங்கு மீசை ஸ்டைல்னு கேட்டார். அப்பா கஜபதி அண்ணனைக் கூப்பிட்டு நான் பார்க்க சொல்றேன்னாரு ராதாரவி. கஜபதி மீசையை இப்படித் தொங்க விட்டா நல்லாருக்காதுன்னு கேட்பார்.

இதையும் படிங்க… சாமானியன் படம் பார்த்த பிரபலங்கள் சொல்வது என்ன?.. வாங்க பார்க்கலாம்!..

நல்லாருக்குங்கன்னு கஜபதி சொன்னார். அப்புறம் ‘என்னய்யா நீ மேக்கப் மேன். பெரிய லவுடா மாதிரி இருக்கு. எடுய்யா இதை’ன்னு சொன்னாரு. பழையபடியும் மீசை வச்சிக்குவாரு. அப்பாவுக்கு விக் வைக்கிறது உலக மகா சாதனை… ‘கஜபதி என்ன விக் வைக்குறது காமி’ன்னு கேட்பார். நல்ல காமிப்பாங்க. எடுத்துருவாரு. அப்புறம் இவரே கத்திரி போட்டு குறுக்க மறுக்கா வெட்டி இருக்கறதுலயே கர்ணகொடூரமான விக்கா மாற்றி அதை வைப்பாரு.

‘ஆ… பார்த்தியா… எப்படிருக்கு?’ன்னு கேட்பாரு. அது ஒரு ஆளு தாங்க. எனக்கு தெரிஞ்சி அவரு ஒரு ஆளுக்குத் தான் இதெல்லாம் ஒத்துப்போச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top