திரையுலகில் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் நுழைந்தவர் விஜயகாந்த். எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோரை பார்த்து சினிமாவில் நுழைந்தவர். துவக்கத்தில் வாய்ப்பு தேடி சினிமா கம்பெனி நிறுவனங்களில் ஏறி இறங்கியவர். பலரையும் நேரில் சென்று வாய்ப்பு கேட்டு அலைந்தவர். ஒரு வழியாக சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து ஹீரோவாக நடிக்க துவங்கினார்.
இவரும் எம்.ஜி.ஆரை போலவே எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர். சில விசயங்களில் எம்.ஜி.ஆரை தாண்டியும் இவர் பல உதவிகளை பலருக்கும் செய்துள்ளார். அதனால்தான் இப்போதும் விஜயகாந்தை போல ஒருவரை பார்க்கவே முடியாது என சின்ன சின்ன நடிகர்கள், நடிகைகள், அவரை வைத்து படம் இயக்கிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் ஊடகங்களில் பேசி வருகிறார்கள். இவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்றும் சிலர் அழைத்தனர்.
அதேநேரம், கலைஞர் கருணாநிதியிடம் நெருக்கமாக இருந்த விஜயகாந்துக்கு எம்.ஜி.ஆரிடம் அதிகம் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வளவாக அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், சினிமாவில் பல வருடங்களாக நடித்துவரும் நடிகர் ராஜேஷ் ஊடகம் ஒன்றில் அளித்தபேட்டியில் ‘ஒருமுறை நான் எம்.ஜி.ஆரை சந்திக்க சென்றேன். அப்போது என்னுடன் வருமாறு விஜயகாந்தை அழைத்தேன். அவரோ ‘நாம கருணாநிதியின் ஆள்’ அவரை போய் எப்படி பாக்குறது?’ என கேட்டார். நான் வற்புறுத்தி அவரை அழைத்து சென்றேன். எம்.ஜி.ஆரிடம் ‘இவர்தான் விஜயகாந்த்’ என் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். எம்.ஜி.ஆர் அவரை பார்த்துவி்ட்டு நலம் விசாரித்துவிட்டு தன் அருகில் அமர சொன்னார். ஆனால், விஜயகாந்த் அவருக்கு பின்னால் போய் நின்று கொண்டார்’ என ராஜேஷ் கூறியிருந்தார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…