கண்ணாம்பா பாதி.. பத்மினி பாதி கலந்த நடிகை யார்? ராஜேஷ் சொல்லும் ருசிகர தகவல்
நடிகர் ராஜேஷ் தமிழ்ப்பட உலகில் ஒரு சிறந்த நடிகர். அவரது நடிப்பு யதார்த்தமாக இருக்கும். அவர் பேசுகிற வசன உச்சரிப்பு தெளிவாகவும், அதே நேரத்தில் கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கும். பாலசந்தரின் அறிமுகம் என்றால் சும்மாவா? நடிப்பிலும் இவர் வெளுத்துவாங்குவார். அவள் ஒரு தொடர்கதையில் தான் அறிமுகம். தன்னோட சினிமா உலக அனுபவங்களைப் பற்றி என்ன சொல்கிறார்னு பார்ப்போமா...
நான் ரொம்ப கோபப்படுவேன். யாரையும் வெறுக்க மாட்டேன். மறந்துடுவேன். ஷாருஹாசன் ஒரு தடவை சொன்னாரு. எமோஷனல் இடியட்னு. என்னடா இப்படி சொல்றாருன்னு நினைச்சேன். அது செல் மெமரிலயும், மசில் மெமரிலயும் போய் பதிஞ்சிடுது. அது பிறவிக்குணமா மாறிடுது. கோப சீன்ல நல்லா ஆக்ட் பண்ணுவேன். வயசில இங்கிலீஷ் படம், இந்திப்படம் பார்ப்பேன். எம்ஜிஆர், சிவாஜினு ரெண்டு பேருகிட்டயும் நல்லா பழகுவேன்.
எல்லாருக்கும் நல்ல மனுஷனா நடக்குற மாதிரி ஒரு போலி வேஷம் கிடையாது. கலைவாணர்லாம் அப்படி இருக்க மாட்டாரு. எம்ஜிஆர், கலைஞர், சிவாஜி, ஜெயலலிதா, ஜானகி என பேரோடு பழகியிருக்கேன். அது ரொம்ப கஷ்டம். மூளையில இருந்து வர்றத விட இதயத்துல இருந்து வர்ற வார்த்தைகளுக்குத் தான் சக்தி அதிகம். எம்ஜிஆரை உண்மையா நேசிக்கும்போது அவரையே அறியாம அவரு நம்ம கல்யாணத்துக்கு வந்துருவாரு.
அவள் ஒரு தொடர்கதை, கன்னிப்பருவத்திலே, சிறை, ஆலயதீபம், அச்சமில்லை அச்சமில்லை படங்களில் நடித்தேன். அப்போது ஒரே வருஷத்துல 3 படம் வந்தது. என்னை தென்னாட்டின் அசாருதீன்னு சொல்வாங்க. அவரே மாதிரி ஹேர்கட்லாம் பண்ணிருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
கன்னிப்பருவத்திலே படம் நாள் எடுத்தாங்க. வடிவுக்கரசியின் 2 சாங் பார்த்தேன். அவங்ககிட்ட ஒரு பத்மினி, ஒரு கண்ணாம்பா உள்ளே இருந்தாங்க. எதை எடுத்தாலும் அதை உள்வாங்கி நடிப்பாங்க. ஆம்பளைங்கள விட பொம்பளைங்களுக்கு அது ஈசியா வரும். அது பிறவியிலேயே உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.