சம்பளம் இது போதும்!. ஆனா அத கொடுத்துடுங்க!. கலாநிதி மாறனிடம் டீல் பேசிய ரஜினி!. தலைவர் செம விவரம்!…

Published on: August 21, 2023
rajini
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே முன்னணி இடத்தில் இருப்பவர் ரஜினி. இப்போதுவரை சூப்பர்ஸ்டார் இடத்தை யாருக்கும் கொடுக்காமல் இருக்கிறார். பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினி சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கி சினிமாவில் வளர்ந்தவர். பாராதிராஜா இயக்கத்தில் உருவான பதினாறு வயதினிலே படத்துக்கு ரூ.3 ஆயிரம் சம்பளம் பேசி 2500தான் பாரதிராஜா கொடுத்தார்.

ஆனால், பல படங்களில் நடித்து லட்சத்துக்கு சம்பளம் மாறி ஒரு கட்டத்தில் கோடிகளில் சம்பளம் வாங்க துவங்கினார். இப்போது ரூ.100 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருக்கிறார். ரஜினியின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: ரஜினி பட இயக்குனருக்கு ரூட்டு போட்ட கமல்!.. ஹிட் பட இயக்குனர்களை தட்டி தூக்கும் உலகநாயகன்…

படம் வெளியாகி 10 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் ஜெயிலர் படம் ரூ.500 கோடி வசூலை தாண்டிவிட்டது. குறிப்பாக வெளிநாடுகளில் இப்படம் ரூ.150 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது. தமிழ்நாட்டில் 162 கோடியும், ஆந்திராவில் 69 கோடியும், கர்நாடகாவில் 60 கோடியும், வட மாநிலங்களில் ரூ.12 கோடியும், வெளிநாட்டில் ரூ.172 கோடி என மொத்தம் ரூ.523 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

ரஜினி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்தார். அப்படத்திற்கு ரூ.112 கோடி வரை ரஜினி சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த லாபத்தை தரவில்லை. எனவேதான், மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஜெயிலர் படத்தை நடித்து கொடுத்தார். இந்த படத்திற்கு ரூ.80 கோடி மட்டுமே ரஜினி சம்பளமாக பெற்றார் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: புடிச்சாலும் புளியங்கொப்பா புடிச்ச துருவ் விக்ரம்! கூடிய சீக்கிரமே அப்பாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகும் வாரிசு

இந்நிலையில், சம்பளம் ரூ.80 கோடி மற்றும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் பங்கு என்கிற அடிப்படையில்தான் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து கொடுத்துள்ளாராம். தற்போது படம் நல்ல வசூலை பெற்றுள்ளதால் ரஜினிக்கு அதிலும் பல கோடிகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. எனவே, கண்டிப்பாக அவருக்கு ரூ.120 கோடிகளுக்கும் மேல் கிடைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே, ரஜினி சம்பளத்தை குறைத்துக்கொண்டு ஜெயிலர் படத்தில் நடிக்கவில்லை. பக்காவாக பேசிக்கொண்டுதான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்த முறை பின் வாங்குறதே இல்லை!.. அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.. ஜெயிலர் மொத்த வசூல் இவ்ளோவா!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.