ரஜினி படமாக மாறிய எம்.ஜி.ஆர் படம்!. பரபரப்பு திருப்பம்!.. நடந்தது இதுதான்...
சினிமாவை பொறுத்தவரை ஒரு கதையில் எந்த ஹீரோ நடிப்பார் என சொல்லவே முடியாது. நடிகர் திலகம் சிவாஜிக்கு சொல்லப்பட்ட சில கதைகளில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார். கமலுக்கு சொல்லப்பட்ட கதைகளில் ரஜினி நடித்திருக்கிறார். கமல் நடிப்பதாக இருந்த ரோபோ திரைப்படம்தான் பின்னாளில் ரஜினி நடித்து எந்திரனாக வெளியானது.
முதல்வன் படம் கூட முதலில் ரஜினிக்குதான் போனது. ஆனால், அவர் அதில் நடிக்க மறுக்கவே அர்ஜூன் நடித்தார். இதுபோல அஜித் நடிக்கவிருந்த கதையில் விஜயும், விஜய் நடிக்கவிருந்த கதையில் மற்ற ஹீரோக்களும் நடித்துள்ளனர். இது திரையுலகில் சாதரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான்.
இதையும் படிங்க: தலைவரு நிரந்தரம்!.. நிரூபித்த ரஜினி!.. ஜெயிலர் 3 நாள் மொத்த வசூல் இத்தனை கோடியா?!…
ஆனால், எம்.ஜி.ஆர் நடிக்கவிருந்த ஒரு திரைப்படத்தில் ரஜினி நடித்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?.. ஆனால், உண்மையில் அப்படி ஒரு நிகழ்வு நடந்தது.1984ம் வருடம் அன்புள்ள எம்.ஜி.ஆர் என்கிற தலைப்பில் ஒரு படம் திட்டமிடப்பட்டது. அந்த கதையும் எம்.ஜி.ஆருக்கு பிடித்திருந்தது. அப்போது அவர் முதல்வராக இருந்தார். முதல்வர் எம்.ஜி.ஆர் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டதால் வேலைகள் வேகமாக நடந்தது. அதில் ஜெயலலிதாவை நடிக்க வைக்கவும் திட்டமிட்டனர். ஆனால், சில காரணங்களால் எம்.ஜி.ஆர் அதில் நடிக்கவில்லை.
எனவே, அதை கதையில் ரஜினியை வைத்து ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ என எடுத்தனர். ஜெயலலிதாவுக்கு பதில் அம்பிகா நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் இடம் பெற்ற ‘கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே’ பாடலை ரஜினியின் மனைவி லதா பாடியிருந்தார்.
இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் ஷிவானி!.. அந்த இடத்த ஜூம் பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ!..