---Advertisement---

நடிகர்கள் பின்னால் போகாதீங்க!.. விஜயை மறைமுகமாக அட்டாக் பண்ணிய ரஜினி!..

Published on: April 8, 2026
rajini vijay
---Advertisement---

ஜெயிலர் பட விழாவில் ரஜினி எப்போது காக்கா – கழுகு கதையை சொன்னாரோ அப்போது முதலே விஜய் ரசிகர்கள் ரஜினியை திட்ட துவங்கினார்கள். ஏனெனில் ‘கழுகு மேலே பறந்துகொண்டிருக்கும். அதைப் பார்த்து நாமும் மேலே பறக்க வேண்டும் என்று காக்காவும் மேலே பறக்க முயற்சி செய்யும்.. ஆனால் காக்காவால் அது முடியாது.. கீழே விழுந்துவிடும்’ என்று பேசினார் ரஜினி.

ரஜினி காக்கா என சொன்னது விஜயைத்தான் என நினைத்த விஜய் ரசிகர்கள் ரஜினியை கடுமையாக திட்ட துவங்கினார்கள்.. அதோடு ஒவ்வொரு முறையும் ரஜினியின் படம் வெளியாகும் போதும் அந்த படத்திற்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். இப்படி செய்ய வேண்டாம்..இது தவறு என விஜய் ஒருமுறை கூட தனது ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லவில்லை என்பதுதான் இதில் ஹைலைட்..

ஒருபக்கம் அரசியலுக்கு வருகிறேன் என சொல்லிவிட்டு ரஜினி பின்வாங்கிய நிலையில் விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். தற்போது அவரின் தவெக சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கவிருக்கிறது. இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ‘இளைஞர்களின் சிந்தனை படிப்பின் மீது மட்டுமே இருக்கவேண்டும். படிப்பில் கவனம் செலுத்துங்கள்.. நடிகர்கள் பின்னாள் செல்லாதீர்கள்.. அவர்களின் பின்னால் சென்று உங்களுக்கு காயம் ஏற்பட்டால் யாரும் உதவ மாட்டார்கள்.. அது உங்களுக்குத்தான் ஆபத்து. படிக்கும் நேரத்தில் படிக்காவிட்டால் காலம் முழுக்க கஷ்டப்படவேண்டும்.. போதைப்பொருட்கள் பழக்கம் கொண்ட நண்பர்களிடமிருந்து விலகியிருங்கள்’ என்று ரஜினி அறிவுரை சொல்லியிருக்கிறார்..

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு முறையும் வெளியே வரும்போதும் அவரின் வாகனத்திற்கு முன்னும் பின்னும் இரு பக்கத்திலும் விஜய் ரசிகர்களும், தவெகவினரும் இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள்.. எப்படியாவது விஜயை அருகில் பார்க்க வேண்டும், ஒரு செல்பி எடுக்க வேண்டும் என அவர்கள் ஆபத்தான முறையில் செயல்படுவதை பார்கும் போது பதறுகிறது..

ஏற்கனவே ஒருவர் தஞ்சாவூரில் விபத்தில் சிக்கி ஒரு கல்லூரி மாணவர் மரணமடைந்தார்.. மேலும், பல பேரும் கீழே விழுகிறார்கள். இன்று விஜய் நெல்லை வந்தபோதும் இது நடந்தது. இந்நிலையில்தான், ரஜினி இளைஞர்களுகு இப்படி ஒரு அறிவுரையை கூறியிருக்கிறார்.