பெரிய சம்பளத்தை கொடுத்த நடிகர்.. ஆடிப்போன நடிகர் திலகம்.. இது தெரியாம போச்சே!…

Published on: February 13, 2023
sivaji
---Advertisement---

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகர் சிவாஜி. முதல் படத்திலேயே அசத்தலாக நடித்த நடிகர் இவர். அதனால்தான் அவருக்கு நடிகர் திலகம் என்கிற பட்டம் கிடைத்தது. சினிமா உலகில் விதவிதமான வேடங்களில் நடித்த ஒரே நடிகர் இவர்தான்.

துவக்கத்தில் நூறுகளில் சம்பளம் பெற்று அதன்பின் சில ஆயிரமாக அவரின் சம்பளம் உயர்ந்தது. பல படங்களில் நடித்த பின்னரே இவரின் சம்பளம் லட்சங்களுக்கு உயர்ந்தது. தற்போது நடிகர்களெல்லாம் பல கோடிகளை சம்பளமாக வாங்குகின்றனர். விஜய் ரூ.120 கோடியும், அஜித் ரூ.100 கோடியும், ரஜினி ரூ. 100 கோடியும் சம்பளமாக பெறுகின்றனர். ஆனால், நடிப்பின் இலக்கணமான செவாலியர் சிவாஜி கடைசிவரை லட்சங்களில்தான் சம்பளம் வாங்கினார்.

Sivaji Ganesan
Sivaji Ganesan

1980 களுக்கு பின் சிவாஜி கணேசன் அவர் நடித்த எந்த திரைப்படத்திற்கும் இதுதான் சம்பளம் என நிர்ணயிக்கவிலை. உங்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என தோன்றுகிறதோ அதை எனக்கு கொடுங்கள் என தயாரிப்பாளர்களிடம் சொல்லிவிடுவாராம். அதுவும் படம் வெளியாகி லாபம் வந்த பின்னரே அந்த சம்பளத்தை வாங்கியுள்ளார்.

விஜயுடன் அவர் நடித்த ஒன்ஸ்மோர் படத்திற்கு ரூ.100 மட்டுமே முன்தொகையாக வாங்கினார். அப்படத்தில் சிவாஜுக்கு ரூ.10 லட்சம் சம்பளம் கொடுத்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். தேவர்மகன் படத்திற்கு ரூ.20 லட்சம் சம்பளமாக கொடுத்தார் கமல்ஹாசன்.

sivaji
sivaji

ரஜினி தயாரித்து நடித்த படையாப்பா படத்தில் அவரின் அப்பாவாக நடித்தார் சிவாஜி. இப்படத்திற்கு தனக்குக் 10 லட்சம் சம்பளம் கொடுப்பார்கள் என சிவாஜி நினைத்தாராம். ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர் ரஜினி அவருக்கு கொடுத்தது ரூ.1 கோடி. செக்கை வாங்கிய பின் அது 10 லட்சம் என்றுதான் சிவாஜி நினைத்தாராம். அதன்பின் அவரின் மகன் ராம்குமாரிடம் கொடுத்த பின்புதான் அது ரூ.1 கோடி என்பது தெரியவந்துள்ளது.

sivaji
sivaji

உடனே தவறுதலாக ஒரு பூஜ்ஜியம் சேர்த்து ஒரு கோடியாக கொடுத்துவிட்டார்கள் என நினைத்து தயாரிப்பு நிர்வாகியை தொடர்பு கொண்டு பேசினாராம். அப்போதுதான் அவருக்கு ரூ.1 கோடியை சம்பளமாக கொடுக்க சொன்னது ரஜினி என்கிற தகவலை அவர் சொல்லியிருக்கிறார். உடனே இதற்கு நன்றி தெரிவித்து ரஜினிக்கு கடிதமும் அனுப்பினார் சிவாஜி.

சிவாஜி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் ரஜினி. சிவாஜி தன் வாழ்நாளில் கோடியை சம்பளமாக பெற்றது படையப்பா படத்திற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சொல்லியிருந்தா நான் நடிச்சிருப்பேன்!.. லோகேஷ் கதையில் நடிக்க ஆசைப்பட்ட சூர்யா!..