நெல்சன் நிலமைதான் லோகேஷுக்கும்!.. தலைவர் வந்துதான் ஹிட் கொடுக்கணும் போல!....
Thalaivar 171: கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் அதிகம் பேசப்பட்ட இயக்குனரின் பெயர் லோகேஷ் கனகராஜ். எங்கிருந்து வந்தார் என்றே தெரியாமல் மாநகரம் படம் மூலம் ஒரு இரவில் நடக்கும் கதையில் அதிர வைத்தார். படம் பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள். பல இயக்குனர்களும் அவரை பாராட்டினார்கள்.
அடுத்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். இதுபோல ஒரு திரைக்கதையை இதுவரை எந்த மொழி படத்திலும் பார்த்திருக்கவே முடியாது. ஒரு இரவில் நடக்கும் கதைக்கு விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்திருந்தார். அதன்பின் மாஸ்டர், விக்ரம் என அடித்து ஆடிய லோகேஷ் இப்போது விஜயை வைத்து லியோ படத்தை கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: லியோ படத்தின் தமிழக வசூல் இத்தனை கோடியா..? ஜெய்லரை தட்டி தூக்கியதா?
ஆனால், லியோ படம் ரசிகர்களுக்கு முழு திருப்தியை கொடுக்கவில்லை. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்களை சோதித்துவிட்டது அல்லது பிடிக்கவில்லை என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். லியோ கதாபாத்திரமே படத்தில் கொஞ்ச நேரம்தான் வருகிறது. படம் முழுக்க பார்த்திபன் மட்டுமே இருக்கிறார்.
இரண்டாம் பாதியில் திரைக்கதையில் லோகேஷ் கோட்டைவிட்டு விட்டார் என்றே பல சினிமா விமர்சகர்களும் கூறிவிட்டனர். கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியபோது பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், படம் அந்த அளவுக்கு இல்லை என்றானதும் சமூகவலைத்தளங்களில் பலரும் அவரை ட்ரோல் செய்தனர்.
ஆனாலும், அவர் மீது நம்பிக்கை வைத்து ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினி. படமும் சூப்பர் ஹிட். இப்போது லியோ படம் மூலம் லோகேஷ் கனகராஜின் இமேஜ் ரசிகர்களிடம் கொஞ்சம் டவுன் ஆகியுள்ளது. அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார். இது ரஜினியின் 171வது திரைப்படமாகும். இதைத்தொடர்ந்து நெல்சன் நிலைமைதான் லோகேஷ் கனகராஜுக்கும். எங்க தலைவர் வந்துதான் அவருக்கும் ஹிட் கொடுக்கணும் என ரஜினி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: லியோவில் லோகேஷ் பண்ண பெரிய தப்பே இதுதான்!.. அந்த ரோலக்ஸை மட்டும் இறக்கியிருந்தா?.