கே.எஸ்.ரவிக்குமாருக்கு குடை பிடித்த ரஜினி!.. சூப்பர்ஸ்டார் அதை பண்ணதுக்கு காரணம் இருக்கு!..
தமிழ் திரையுலகில் புரியாத புதிர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால், சேரன் பாண்டியன் படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். சரத்குமாரை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர். அதில் முக்கியமான திரைப்படம் நாட்டாமை. இந்த படம் வசூலை வாரி குவித்தது.
இந்த படத்தை பார்த்த ரஜினிக்கு கே.எஸ்.ரவிக்குமாரின் ஸ்டைல் மிகவும் பிடித்துபோக அவரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அப்படித்தான் முத்து படம் உருவானது. ஒரு மலையாள படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி ரஜினிக்கு ஏற்றது மாதிரி திரைக்கதை அமைத்தார் கே.எஸ்.ரவிக்குமார். படமோ சூப்பர் ஹிட்.
இதையும் படிங்க: தனுஷ் நடிக்கும் படத்தில் கமல், ரஜினி, சிம்பு? இதெல்லாம் வெறும் கனவா இல்லை நனவா?..
அதன்பின் ரஜினியை வைத்து ரவிக்குமார் இயக்கிய படையப்பா திரைப்படமும் அமோக வெற்றி பெற்றது. எனவே, ரஜினியின் குட்புக்கில் இருக்கும் இயக்குனராக கே.எஸ்.ரவிக்குமார் மாறிப்போனார். ரஜினியை வைத்து சூப்பர் ஹிட் கொடுத்ததால் கமலும் ரவிக்குமாரின் இயக்கத்தில் தெனாலி, அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், தசாவதாரம் ஆகிய படங்களில் நடித்தார்.
முத்து படத்தில் கேரள முதலாளியாக ஒரு காட்சியில் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருப்பார். ஆனால், அப்படி நடிக்கும் ஐடியாவே அவருக்கு இல்லையாம். ரஜினியே அவரை வற்புறுத்தி நடிக்க வைத்திருக்கிறார். மீனா ரஜினியிடம் மலையாளத்தில் ஒன்றை சொல்ல அதற்கு அர்த்தம் புரியாமல் அவரிடம் சென்று சந்தேகம் கேட்பார் ரஜினி. அப்போது முத்தம் கொடுத்து ‘இதைத்தான் அந்த பொண்ணு உங்ககிட்ட கேட்டா’ என சொல்வார்.
இதையும் படிங்க: ரஜினிக்கு இளநீர் வாங்கி கொடுக்க மறுத்த யூனிட் ஆட்கள்… அதற்கும் அசராமல் இறங்கி போன அவர் குணம்….
இந்த காட்சியில் ரவிக்குமார் நடிக்கும்போது அவருக்கு மேக்கப்போடும் போது அவருக்கு கண்ணாடி பிடிப்பது, படப்பிடிப்பில் குடைபிடிப்பது என அவர் நடித்து முடிக்கும்வரை அந்த சூழலை மிகவும் இலகுவாக வைத்திருந்தாராம் ரஜினி. அதனால் சிறப்பாக நடித்து முடித்தார் ரவிக்குமார்.
அதேபோல்தான், படையப்பா படத்தில் வரும் கிக்கு ஏறுதே பாடலிலும் கே.எஸ்.ரவிக்குமாரை கடைசி நேரத்தில் ‘நீங்கள் இந்த பாடலில் ஆடுகிறீர்கள்’ என சொல்லி வற்புறுத்தி நடிக்க வைத்ததும் ரஜினிதான். ரஜினி - ரவிக்குமார் நட்பு என்பது இப்போதும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms