வெள்ளிவிழாவைக் கொண்டாடிய சூப்பர்ஹிட் ரஜினி படங்கள்: ஓர் பார்வை

Annamalai Rajni
சூப்பர் ஸ்டார் ரஜினி வளர்ந்து வந்த கால கட்டத்தில் அவரது படங்கள் கமல் படங்களுடன் கடும் போட்டி போடும். இருவரது படங்களும் வெள்ளி விழா காணும். இருவரது ரசிகர்களும் வெறித்தனமாக இருப்பார்கள். தங்கள் தலைவர் படம் வந்து விட்டால் போதும்.
தியேட்டர்களின் வாசலில் போட்டி போட்டு கட் அவுட்களின் உயரத்தைக் கூட்டுவர். பாலாபிஷேகம், மேளம், வாணவேடிக்கை என்று திரையரங்கை கோவில் திருவிழாவாக மாற்றி விடுவார்கள். அது ஒரு கனாக்காலம்.
ஆனால் இன்றைய ரசிகர்கள் அப்படி இல்லை. இப்போது ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வெள்ளிவிழாவைக் கொண்டாடிய சில படங்கள் பற்றிப் பார்ப்போம்.
ப்ரியா

Priya Rajni
1978ல் வெளியான இந்தப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ஸ்ரீகாந்த், அம்பரீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். ஏ பாடல் ஒன்று, அக்கறைச் சீமை அழகினிலே, டார்லிங் டார்லிங், என் உயிர் நீதானே, ஸ்ரீராமனின் ஸ்ரீதேவி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பில்லா

Billa Rajni
1980ல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் ரஜினியின் ஸ்டைல் பட்டையைக் கிளப்பும். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.
மை நேம் இஸ் பில்லா, இரவும் பகலும், வெத்தலயப் போட்டேன்டி, நாட்டுக்குள்ள எனக்கொரு, நினைத்தாலே இனிக்கும் சுகமே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
முள்ளும் மலரும்

Mullum malarum
1978ல் வெளியான இப்படத்தை மகேந்திரன் இயக்கினார். ரஜினிகாந்த், சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் உருவான பாடல்கள் அனைத்தும் அருமை.
இந்தப்படத்தில் ரஜினிகாந்த்தின் வித்தியாசமான அருமையான நடிப்பைக் கண்டு ரசிக்கலாம். இப்படத்தில் இடம்பெற்றுள்ள செந்தாழம்பூவில், அடி பெண்ணே, ராமன் ஆண்டாலும், நித்தம் நித்தம் நெல்லு சோறு ஆகிய பாடல்கள் இன்று வரை ரீங்காரமிடுகின்றன.
மனிதன்

Manithan Rajni poster
1987ல் வெளியான இந்தப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரஜினிகாந்த், ரூபினி, மாதுரி, ரகுவரன், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், சோ, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சந்திரபோஸ் இசை அமைப்பில் உருவான படம். பாடல்கள் அனைத்தும் அருமை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்கப்பட்டு வெள்ளிவிழாவைக் கொண்டாடியது. காள, காள, மனிதன் மனிதன், முத்து முத்து பெண்ணை, வானத்தப் பார்த்தேன், ஏதோ நடக்கிறது ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
மன்னன்

Super star Rajni and Lady Super star Vijayasanthi in Mannan
1992ல் வெளியான இந்தப்படத்தை பி.வாசு இயக்கினார். ரஜினிகாந்த், குஷ்பு, விஜயசாந்தி, மனோரமா, பண்டரிபாய், கவுண்டமணி, விசு, வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் பிரபு கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்தானவை. ராஜாதி ராஜா, சண்டி ராணியே, அடிக்குது குளிரு, அம்மா என்றழைக்காத, கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு, மன்னர் மன்னனே ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
அண்ணாமலை
1992ல் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாமலை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று மெகா ஹிட் ஆனது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்தப்படத்தில் ரஜினியுடன் குஷ்பூ, மனோரமா, ஜனகராஜ், நிழல்கள் ரவி, வினுசக்கரவர்த்தி, மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர்.
தேவாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் அருமையிலும் அருமை. வந்தேன்டா பால்காரன், அண்ணாமலை அண்ணாமலை, கொண்டையில் தாழம்பூ, வெற்றி நிச்சயம், ஒரு பெண் புறா, ரெக்கை கட்டி பறக்குதடி ஆகிய மனது மறக்காத பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளன.