விடாமுயற்சி என்று சொல்வதை விட முயற்சியை விடு என்றே சொல்லலாம். அஜித் பேரை கேட்டாலே மற்ற ரசிகர்களை விட அவரது ரசிகர்களே இப்போது கடும் எரிச்சலில் இருக்கிறார்கள். விஜய் படம் , ரஜினி படம், சூர்யா படம், சிவகார்த்திகேயன், சிம்பு என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகும் போது அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகிறார்கள்.
இதோ ஆரம்பமாகிறது , அதோ ஆரம்பமாகிறது என இன்று வரை விடாமுயற்சி செல்ஃபே எடுத்த மாதிரி தெரியவில்லை. இதை பற்றி எதுவுமே அக்கறை இல்லாத அஜித் தன்னுடைய பொழுது போக்கான பைக் பயணம் தான் முக்கியம் என்று உலக பைக் பயணத்திற்கு சென்று விட்டார்.
இதையும் படிங்க : என்ன கதை வேணுனாலும் சொல்லிக்கோ! ‘லியோ’ ஆடியோ லாஞ்சில் விஜயிடம் எதிர்பார்ப்பது இதுதான்
லைக்கா நிறுவனமும் எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்கவில்லை. ஆனால் ரஜினி ஜெய்லர் , அதன் பிறகு லால் சலாம், அதன் பிறகு அவரது 170 வது படத்தின் லுக் டெஸ்ட் வரைக்கும் சென்று விட்டார். 70 வயதை கடந்தும் இன்னும் அதே சுறுசுறுப்புடன் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ரஜினியின் 170 வது படத்தை ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் தான் இயக்குகிறார். இந்தப் படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது. அதற்கான வேலைகளில் தான் இப்போது லைக்கா நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது.
அந்தப் படத்திற்கான லுக் டெஸ்டை ஹாலிவுட்டில் இருந்து ஒரு மேக்கப் இயக்குனரை வரவழைத்து பார்த்தார்களாம். அது செட் ஆகிவிட்டதாம். அவ்ளோதான் தலைவரு அவருடைய அடுத்த படத்திற்கு ரெடியாகிட்டாரு.
இதையும் படிங்க : என்னால என் பசங்க வீட்ட விட்டு போய்ட்டாங்க – சாக்லேட் பாய் அப்பாஸுக்கு பின்னாடி இப்படி ஒரு சோகமா?
ஆனால் ஜெய்லர் படம் முடிந்த கையோடு இமயமலை செல்வதாக சில தகவல்கள் கசிந்தது. அதற்குள் இந்தப் பக்கம் தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளில் ரஜினி இறங்கியிருப்பது ரசிகர்கள் மட்டுமில்ல பிரபலங்கள் மத்தியிலும் பெரும் ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…