நானே டிஸ்கோ மூடுல இருக்கேன்.. இதுல நீங்க வேற! ‘வேட்டையன்’ படத்தால் கடுப்பில் ரஜினி
Actor Rajini : தமிழ் சினிமாவில் ரஜினியின் மாஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அதுவும் நேற்று வெளியான கூலி படத்தின் டீஸர் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. ரஜினியை வைத்து லோகேஷ் ஒரு தரமான சம்பவத்தை செய்ய இருக்கிறார் என்று நன்றாகவே தெரிகிறது. லியோ படத்தின் இரண்டாம் பாகத்தில் எப்படியோ திரைக்கதையில் சொதப்பி விட்டார் லோகேஷ்.
ஆனால் அதற்கு முன் வெளியான விக்ரம் படத்தில் கமலுக்கு ஒரு புதிய வாழ்க்கையையே கொடுத்தார். அதைப் போல கூலி படத்தின் மூலமும் ரஜினியை ஒரு பெரிய சாம்ராஜ்யத்தில் உட்கார வைப்பார் என்று தெரிகிறது. சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் லோகேஷ் ரஜினி சாரை வைத்து ஒன்னு நினைச்சிருக்கேன். அதை படத்தில் காட்டுவேன் என்று கூறியிருந்தார். ஆனால் அதை டீஸரிலேயே காட்டியிருக்கிறார்.
இதையும் படிங்க: சொன்னீங்களே செஞ்சீங்களா… விஜயகாந்த் விஷயத்தால் கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்!…
இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஓரளவு முடிந்து விட்டது என்று செய்தி வெளியான நிலையில் இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் இருப்பதாகவும் 25ஆம் தேதியில் இருந்து அதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதில் ரஜினி போர்ஷன்கள் மே 12 ஆம் தேதி வரைக்கும் இருக்கும் என்றும் தெரிகிறது. அதுவும் ரஜினியின் காட்சிகளை முடித்துவிட்டு அதன் பிறகு மற்ற நடிகர்களின் காட்சிகளை படமாக்க இருக்கிறார்களாம். மே மாதம் கடைசி தேதியில் இருந்து தான் கூலி படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் வந்த மனோஜ் காதலி… ரோகிணி நினைக்கிறதெல்லாம் நடக்குதே… நல்லாவா இருக்கு!
இதனால் ரஜினி கொஞ்சம் கடுப்பில் இருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. ஏனெனில் ரஜினி கொடுத்த கால்ஷீட்டையும் மீறி அதிக நாள்கள் படப்பிடிப்பு நடப்பதாலேயே ரஜினி கொஞ்சம் டென்ஷனில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.