யூத் லுக்கில் நடிகை பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எண்ட்ரி கொடுத்த ரஜினி!... வைரல் புகைப்படங்கள்..

by சிவா |   ( Updated:2023-11-18 09:10:17  )
rajini
X

Thalaivar 170 : ஜெயிலர் படம் மெகா ஹிட் அடித்த நிலையில் ரஜினி மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார். ஏனெனில், நெல்சனின் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படம் ரூ.700 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது. விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் கூட ஜெயிலர் பட வசூலை தாண்டவில்லை என சொல்லப்படுகிறது.

அதே உற்சாகத்தில் ரஜினி தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். சூர்யா, மணிகண்டன் ஆகியோர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 170வது திரைப்படமாகும்.

இந்த படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ரித்திகா சிங் என பலரும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நாகர் கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் என பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது. ஞானவேல் இயக்குனர் என்பதல் இந்த படம் ஜெய்பீம் படம் போலவே சமூகபிரச்சனையை பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

rajini

ஒருபக்கம் புதிய படங்களை பார்ப்பது, படம் பிடித்திருந்தால் படக்குழுவினரை நேரில் வரவழைத்து பாராட்டுவது என ரஜினி உற்சாகமாக இருக்கிறார். சமீபத்தில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்து படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.

rajini

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - கங்கனா ரனாவத் நடித்துவரும் ஒரு புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜைக்கு ரஜினி சென்று அந்த படம் வெற்றியடைய வாழ்த்தியுள்ளார். ரஜினி யூத் லுக்கில் இருக்கும் இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story