வீடு வாங்கியும் நிறைவேறாம போன ஆசை!.. ரஜினிக்குள்ள இன்னும் அந்த சோகம் இருக்காம்!...

rajini
வீடு வாங்குவது என்பது எல்லோருக்கும் ஒரு கனவுதான். சாதாரண ஏழை கூட ஒரு குடிசை வீடாவது தனக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என நினைப்பார். இது எல்லோருக்கும் பொருந்தும். அதாவது, எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் சரி, வேலை செய்பவராக இருந்தாலும் சரி, வீடு வாங்குவது என்பது எல்லோரும் ஒரு பெரிய ஆசைதான்.
இது நடிகர்களுக்கும் பொருந்தும். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் பல நடிகர்கள் வாடகை வீட்டில்தான் வசிப்பார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து சொந்த வீடு கட்டுவதற்கு பல வருடங்கள் ஆகிவிடும். அதுவும் தொடர்ந்து வாய்ப்புகள் வரவேண்டும். இல்லையேல் அது நடக்காது.
இதையும் படிங்க: சென்சார் பிரச்சனையால் தலைப்பு மாற்றப்பட்ட ரஜினி படம்!. அட இது தெரியாம போச்சே!..
காமெடி, குணச்சித்திரம், வில்லன், ஹீரோ என எந்த மாதிரியான வேடத்தில் நடித்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தால் மட்டுமே பணம் சேர்த்து வீட்டு கட்டமுடியும். ரஜினி போய்ஸ்கார்டனில் வீடு வைத்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் இன்றைய மதிப்பு ரூ.150 கோடியை தாண்டும்.
ஆனால், அவர் சென்னை வந்து நடிப்பு கல்லூரியில் படித்தபோது அவர் தங்கியிருந்தது ஒரு சிறிய அறையில்தான். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு விடுதியில் ரூ.28 மாத வாடகை கொடுத்து ஒரு அறையில் தங்கினார். அந்த அறையின் கீழே அந்த விடுதியின் சமையலறை இருந்தது. எனவே, சூடும், புகையும் அப்படியே அந்த அறைக்கு வரும். எனவே, ஒரு துணியை கொண்டு ஜன்னலை மறைத்து அதில் தங்கினார் ரஜினி.
இதையும் படிங்க: நல்லவனுக்கு நல்லவன்! கெட்டவனுக்கு கெட்டவன் – ரஜினி வில்லனாக கலக்கிய திரைப்படங்கள்..
அதன்பின் சினிமாவில் நடிக்க துவங்கி பணம் சேர்த்து போயஸ்கார்டனில் ஒரு வீட்டை கட்டினார். தான் கட்டிய வீட்டில் தனது அப்பாவை தங்க வைக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்தது. எனவே, பெங்களூர் சென்று அப்பாவை அழைத்து வரப்போனார். ஆனால், அப்போது அவரின் அப்பா கண்பார்வை போன நிலையில் இருந்தார். ரஜினிக்கு சோகம் தாங்கமுடியவில்லை.
தான் கட்டிய வீட்டை அப்பாவால் பார்க்க முடியவில்லையே என வருந்தினார். தன்னோடு சென்னை வந்துவிடும்படி ரஜினி அழைத்தும் அவ்வரின் அப்பா ராமோஜுராவ் கெய்க்வாட் மறுத்துவிட்டார். இந்த சோகம் ரஜினியின் மனதில் இப்போதும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: தனது அப்பா கெட்டப்பில் ரஜினி நடித்த படம்!.. அப்பா மேல இவ்வளவு பாசமா?!..