Connect with us

செல்போனில் அழைத்து பாராட்டிய ரஜினி…உருகும் விக்னேஷ் சிவன்…

vignesh shivan

Cinema News

செல்போனில் அழைத்து பாராட்டிய ரஜினி…உருகும் விக்னேஷ் சிவன்…

நடிகர் ரஜினிக்கு ஒரு பழக்கம் உண்டு. புதிய படங்கள் ரிலீஸ் ஆகி ‘படம் நன்றாக இருக்கிறது’ என்கிற பேச்சு எழுந்தால் உடனே அந்த படத்தை பார்த்து விடுவார். அவரை அப்படம் கவர்ந்தால் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள்,தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் பாராட்டுவார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான ‘மாநாடு’ படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, வெங்கட்பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா என அனைவரையும் போனில் அழைத்து பாராட்டியிருந்தார். ரஜினியின் பாராட்டு கிடைத்தால் அதை பெரும் வெகுமதியாக நினைக்கிறது சினிமா உலகம்.

தற்போது ராக்கி திரைப்படமும் ரஜினியின் பாராட்டை பெற்றுள்ளது. நடிகர் வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராக்கி. இவர் ராம் இயக்கிய தரமணி படத்தில் நடித்தவர். ராக்கி படத்தில் ரோகினி, பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் தங்களின் ரவுடிபேபி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை ரிலீஸ் செய்துள்ளனர்.

 

சமீபத்தில் இப்படத்தை நடிகர் ரஜினி தனது வீட்டில் பார்த்துள்ளார். படத்தின் மேக்கிங்கை பார்த்து மிரண்டு போன ரஜினி அப்படத்தில் நடித்த வசந்த் ரவி மற்றும் பாரதிராஜாவை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியானது.

nayanthara

இந்நிலையில், இப்படத்தை ரிலீஸ் செய்த விக்னேஷ் சிவனையும் செல்போனில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய விக்னேஷ் சிவன் ‘”இன்று தலைவரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தது. என்னையும் நயனையும் பாராட்டினார். அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தலைவர் சொன்ன மனஉறுதியை வார்த்தைகளால் விளக்க முடியாது’ என அவர் தெரிவித்தார்.

Continue Reading
To Top