இது நடந்தாதான் நான் உள்ளயே வருவேன்!.. சிவாஜி ஷூட்டிங் ஸ்பாட்டில் கோபப்பட்ட ரஜினி!…

Published on: April 8, 2024
rajini
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர். பேருந்து நடத்துனராக வேலை பார்த்து வந்த ரஜினி சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து நடிப்பு கல்லூரியில் படித்து பயிற்சி பெற்று கே.பாலச்சந்தர் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

துவக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களிலும் நடித்து வந்த ரஜினி பைரவி படம் மூலம் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் வசூல் மன்னனாக மாறி சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். ரஜினி படம் என்றாலே வெற்றி என்கிற நிலையும் உருவானது.

இதையும் படிங்க: கர்ப்பமா இருந்தத மறச்சிட்டேன்!… ரஜினி பதறிட்டாரு!.. கவர்ச்சி நடிகை சொல்றத கேளுங்க!…

மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்ததாலும், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உடையவராக இருந்ததாலும் ரஜினி எப்போதும் எளிமையாகவே இருக்கிறார். பொதுவாக பெரிய நடிகர்கள் படங்களின் படப்பிடிப்பு நடக்கும்போது அந்த நடிகரை வெகுவாக கவனிப்பார்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஜூஸ், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் இருந்து உணவு, சினேக்ஸ் என அந்த நடிகர் என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பார்கள்.

ஆனால், ரஜினிக்கு இதிலெல்லாம் பெரிய ஆர்வமில்லை. அதுவும் உடல்நிலை பாதிக்கப்பட்டபின் அவர் மிகவும் எளிமையான உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறார். மேலும், கடந்த பல வருடங்களாகவே அவர் கேரவான் பயன்படுத்துவதே இல்லை. ஒரு சேரை போட்டு ஒரு இடத்தில் அமர்ந்துவிடுவார்.

இதையும் படிங்க: ரஜினியின் ஹிட் நாயகி மீண்டுமா? நல்லா இருக்கே… தலைவர்171 படத்தின் சூப்பர் ட்விஸ்ட்!..

சக நடிகர்களுடன் பேசிக்கொண்டிருப்பார். உடை மாற்றுவது உள்ளிட்ட சில முக்கிய விஷயங்களுக்கு மட்டுமே அவர் கேரவானை பயன்படுத்தி வருகிறார். ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய படம்தான் சிவாஜி. இந்த படத்தில் நடிக்கும்போது சில காட்சிகள் ஏவிஎம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது.

அப்போது தனக்காக கேரவான் நின்றதை பார்த்த ரஜினி ‘ஏவிஎம் தயாரிப்பில் நான் எவ்வளவு படங்களில் நடித்திருக்கிறேன். கேரவானை நான் பயன்படுத்தியதே இல்லை. இப்போது என்ன புதுப்பழக்கம்?. முதலில் அதை வெளியே கொண்டு போங்கள். அப்போதுதான் உள்ளே வருவேன்’ என சொல்லிவிட்டாராம். ரஜினியே அப்படி சொல்லிவிட்டதால் ஷங்கருக்காக கொண்டு வந்த கேரவானையும் சேர்த்து மொத்தம் 4 கேரவான்களை வெளியே கொண்டு போய்விட்டார்கள். இந்த தகவலை ஏவிஎம் சரவணனே ஊடகம் ஒன்றில் கூறி ரஜினி மிகவும் எளிமையானவர் என பாராட்டி இருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.