latest news
45 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரஜினி கொடுத்த பரிசு!.. வைரல் போட்டோ!…
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் பத்மா (48). இவர் ஒரு தூய்மை பணியாளர்.. மூன்று வாரங்களுக்கு முன்பு தி.நகரில் பணியில் ஈடுபட்டிருந்த போது சாலையில் ஒரு பைக் கிடந்ததை பார்த்தார்.. அதில் நிறைய நகைகள் இருந்ததால் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்..
விசாரணையில் அந்த நகை நங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் பரமேஸ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.. அதோடு அந்த நகையின் மதிப்பு 45 பவுன் என்பது தெரியவந்தது.. இதையடுத்து அந்த பெண்ணை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினார்கள். நகையும் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் அவரின் செயலை பாராட்டி ஒரு லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.. மேலும் அவருக்கு பல உதவிகளும் கிடைத்தன.. அவரின் பெயரில் தபால் தலையும் வெளியிடப்பட்டது.. இந்நிலையில் நடிகர் ரஜினி பத்மாவை தனது வீட்டுக்கு வரவழைத்து அவர் செய்த செயலை பாராட்டியதோடு அவருக்கு தங்கச்சங்கிலியும் பரிசாக அளித்தார்.. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது..
