இந்தியன் 2 படம் எப்படி இருக்கு?.. அட ரஜினி சொன்ன பதிலை பாருங்க!..
ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் இந்தியன் 2. 1996ம் வருடம் இந்தியன் படம் வெளியானது. இந்த படத்தில் அப்பா - மகன் என கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்தியன் படம் சூப்பர் ஹிட் அடித்தது.
தமிழக அரசு அலுவலங்களில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை தேர்ந்தெடுத்து அவர்களை கொலை செய்யும் இந்தியன் தாத்தா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போது பல வருடங்கள் கழித்து இந்தியன் 2-வை உருவாக்கியுள்ளார் ஷங்கர். முதல் பாகத்தில் வெளிநாடு தப்பி சென்ற இந்தியன் தாத்தா மீண்டும் இந்தியாவுக்குள் வந்து மக்களை சுரண்டி பிழைக்கும் பணக்காரர்களை கொலை செய்வதுதான் கதை.
இதையும் படிங்க: சினிமாவில் உங்க தலையீடு அதிகமா இருக்கு!.. வேண்டாம் சொல்லிட்டேன்!.. உதயநிதியை சொல்கிறாரா விஷால்?!..
இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த இந்தியன் 2 படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. படத்தின் கதையும், திரைக்கதையும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் நிறைய வந்தது.
முதல் பாகத்திலேயே சேனாதிபதி இறந்து போயிருக்கலாம். இப்போது மீண்டும் வந்து டார்ச்சர் செய்திருக்கிறார் என்றெல்லாம் டிவிட்டரில் சிலர் நக்கலடித்தார்கள். புளூசட்ட மாறன், பயில்வான் ரங்கநாதன் உட்பட பல விமர்சகர்கள் படத்தை கிண்டலத்து வீடியோ போட்டார்கள். பல மீம்ஸ்களும் வெளிவந்தது.
இதையும் படிங்க: நெஜமாவா!.. அருந்ததி படத்துல ஃபர்ஸ்ட் சாய்ஸ் ‘மகாராஜா’ பட நடிகையாம்… அப்ப அனுஷ்கா இல்லையா?…
‘இந்தியன் 2 படம் நன்றாக இல்லை. எனவே, நல்லா இல்லை என்றுதான் சொல்ல முடியும். சொன்னால் திட்டுகிறார்கள். விமர்சனம் செய்பவர்களை மிரட்டாதீர்கள்’ என ஒரு சினிமா விழாவில் பயில்வான் ரங்கநாதன் பேசிய அளவு சென்றது. வழக்கமாக கமலின் எந்த படம் வந்தாலும் அவரின் நண்பர் ரஜினி பார்த்துவிடுவார்.
ஆனால், இந்தியன் 2 வெளியாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் ரஜினி இப்படம் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொன்ன ரஜினி ‘இந்தியன் 2 படம் பார்த்தேன். நன்றாக இருக்கிறது’ என சொன்னார். மேலும், கூலி படத்தின் வேலை படத்தின் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது’ என கூறினார்.