Connect with us
rajinikanth

Cinema History

ஒரு கோடி கொடுத்தும் சம்மதிக்காத ரஜினி!.. மனுஷனுக்கு இப்படி ஒரு கொள்கையா?!…

அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரஜினிகாந்த். தொடர்ந்து பாலச்சந்தரின் இயக்கத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். துவக்கத்தில் கமலுடன் மட்டுமே இணைந்து நடித்து வந்த ரஜினி ஒரு கட்டத்தில் தனியாக நடிக்க துவங்கினார். அப்படி அவர் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம் பைரவி.

இந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து ஹீரோவாக நடித்தார். அவர் நடித்த படங்கள் நல்ல வசூலை பெறவே தயாரிப்பாளர்கள் அவரை தேடி வந்தனர். ஒரு கட்டத்தில் வசூல் மன்னனாக மாறி சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். ரஜினி படம் ரிலீஸ் என்றாலே அவரின் ரசிகர்களுக்கு திருவிழா போல மாறியது.

இதையும் படிங்க: மருமகனிடம் பிடித்த விஷயங்கள் இவ்வளவு இருக்கா..? பட்டியல் போடும் ஆக்ஷன் கிங் அர்ஜூன்

அவரின் போட்டி நடிகர் கமலுக்கு செம டஃப் கொடுத்தார் ரஜினி. கமல்ஹாசன் வித்தியாசமான கதைகளில் நடித்து நடிப்பு திறமையை காட்டினால் ரஜினியோ மசாலா படங்களில் நடித்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்தார். 70 வயதை தாண்டிய பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். நடிகர் ரஜினியை இதுவரை யாரும் விளம்பர படங்களில் பார்த்திருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர் நடித்தது இல்லை.

sivaji

80களில், தமிழக அரசு விற்பனை செய்த ஒரு குளிர்பானத்தை புரமோட் செய்தற்காக மட்டும் அது தொடர்பான ஒரு விளம்பர படத்தில் நடித்தார். ஆனால், அதன்பின் அவர் ஒரு விளம்பர படத்தில் கூட நடித்தது இல்லை. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் சிவாஜி படத்தில் ரஜினி நடித்த போது ஒரு செண்ட் கம்பெனி ஏவிஎம் நிறுவனத்தை அணுகியது.

இந்த படத்தின் ஒரு போஸ்டரை நாங்கள் எங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்தி கொள்கிறோம். அதற்காக ஒரு கோடி தருகிறோம் என சொல்ல இந்த தகவலை ரஜினியிடம் சொன்ன ஏவிஎம் சரவணன் ‘அந்த ஒரு கோடியை உங்கள் அறக்கட்டைளைக்கு வைத்துக்கொள்ளுங்கள்’ என சொன்னார். ஆனால், அதை ஏற்க மறுத்த ரஜினி ‘நான் விளம்பர் படங்களில் நடிப்பதில்லை. இது நடந்தால் அந்த செண்ட்டை நான் பயன்படுத்துகிறேன் என என் ரசிகர்கள் நம்புவார்கள். நான் பயன்படுத்தாத ஒன்றில் காசுக்காக என் படம் இடம் பெறுவதை நான் விரும்பவில்லை’ என சொல்ல மறுத்துவிட்டார் ரஜினி.

google news
Continue Reading

More in Cinema History

To Top