மனுஷன் சொல்றத பாத்தா திருமண வாழ்க்கையில சந்தோஷம் இல்ல போல...! ரஜினியின் குமுறல்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் தயாராகும் ஜெய்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று ரிலீஸ் ஆகி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் உட்பட பலரும் நடிக்கின்றனர்.
படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆனதில் இருந்து ஏகப்பட்ட ட்ரோல்கள் இணையத்தில்
வந்த வண்ணம் இருக்கின்றன. இருந்தாலும் படக்குழுவினர் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் படவேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினியில் பழைய நேர்காணல் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த நேர்காணல் ரஜினி நடித்த எந்திரன் 2.0 படத்தை பற்றிய நேர்காணலாக தெரிகிறது. அப்போது படத்தை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து வந்த ரஜினி தன் பழைய நியாபகங்களையும் கூடவே பகிர்ந்தார்.
அப்போது இவர் நடிக்க வந்த புதிதில் பெரிய நடிகர்களின் போஸ்டர்களை பார்த்து வியந்து இதே மாதிரி நமக்கும் வைப்பார்களே எண்ணி ஆசையில் இருந்தாராம். அது இப்பொழுது நனவாகும் போது எப்படி இருக்கிறது என கேட்க பதிலளித்த ரஜினி கனவில் இருந்த ஆசை நனவாகும் போது இல்லை. மேலும் எல்லா விஷயத்திலும் அப்படிதான் குறிப்பாக மேரேஜ் விஷயத்துலயும் அப்படித்தான் என சொல்லி புன்னகைத்தார்.