Connect with us
rajini

Cinema History

ரவுடியை ஓட ஓட விரட்டி அடித்த ரஜினி!.. அப்பவே அவர் ஹீரோதான் போல!..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 30 வருடங்களுக்கு மேல் இந்த பட்டத்தை கையில் வைத்திருக்கிறார். இப்போதும் அவரின் பட்டத்திற்குதான் சில நடிகர்கள் ஆசைப்படுகின்றனர். சினிமாவிற்கு வருவதற்கு முன் கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்தார். நாடகம் ஒன்றில் துரியோதனனாக அவரின் நடிப்பை பார்த்த அவரின் நண்பர்கள் ‘நீ சினிமாவில் நடி’ என ஆசையை தூண்டிவிட்டதால் சென்னை வந்தார்.

rajini

நண்பர்களின் உதவியுடன் நடிப்பு பயிற்சியை பெற்றார். பாலச்சந்தர் கண்ணில் பட்டு ‘அபூர்வ ராகங்கள்’ படம் மூலம் நடிகராக மாறினார். அதன்பின் தொடர்ந்து சில படங்களில் கதாநாகர்களின் நண்பனாகவும், சில படங்களில் வில்லனாகவும் நடித்தார். பைரவி படம் மூலம் ஹீரோவாக மாறினார். பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். ஒருகட்டத்தில் ரஜினி நடித்தாலே வெற்றி என்கிற நிலையும் உருவானது. சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். எம்.ஜி.ஆர் பாணியில் அதிகமான ஆக்‌ஷன் படங்களில் நடித்தார். இப்போது அவருக்கு 70 வயது ஆகிவிட்டது. ஆனால், இப்போதும் ஆக்‌ஷன் ஹீரோவாகவே கலக்கி வருகிறார்.

rajini

rajini

இந்நிலையில், ரஜினி வாலிப வயதிலேயே ஹீரோவாகத்தான் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பெங்களூரில் நாராயணன் என்கிற ரவுடி இருந்துள்ளான். அவர் பேர் சொன்னாலே எல்லோரும் பயப்படும் அளவுக்கு பெரிய ரவுடியாக அவன் இருந்துள்ளான். ரஜினி பேருந்து நடத்துனராக வேலை செய்த போது அந்த ரவுடியுடன் மோதல் ஏற்பட்டு அவரை விரட்டி விரட்டி அடித்தாராம். ரஜினிக்கு பயந்து அந்த ரவுடி தப்பித்து ஓடினானாம். ரஜினி நடித்த ‘தப்புதாளங்கள்’ படத்தில் அந்த ரவுடியை போலவே இடுப்பில் பெரிய பெல்ட் மற்றும் சைக்கிள் செயினை கையில் ஸ்டைலாக வைத்துக்கொண்டு ரஜினி நடித்திருப்பார். இந்த தகவலை அவரின் சகோதரர் சத்யநாராயண ராவ் ஊடகம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மொத்தத்தில் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ரஜினி ஹீரோவாகத்தான் இருந்துள்ளார் போல!..

google news
Continue Reading

More in Cinema History

To Top