ஒரு நிமிடம் முகத்தை உத்துப்பார்த்த ரஜினி!.. அவர் சொன்னதுதான் ஹைலைட்.. பார்த்திபன் பகிர்ந்த சீக்ரெட்!..
திரையுலகில் சினிமா பின்னணி இல்லாதவர்களுக்கு வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபமில்லை. நடிகராக மாறுவதற்கும் சரி, இயக்குனராவதற்கும் சரி போராட வேண்டி வரும். பல சினிமா கம்பெனிகளுக்கு நடையாய் நடக்க வேண்டும். தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைய வேண்டும். இயக்குனராக வேண்டும் எனில் ஒரு கதையை வைத்துக்கொண்டு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பின்னால் நாயாய் அலைய வேண்டும். பல வருடங்கள் போராட வேண்டும்.
அப்படி போராடி சினிமாவுக்கு வந்தவரில் ஒருவர்தான் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன். சினிமா ஆசையில் ஊரிலிருந்து சென்னை வந்து நாடகங்களில் நடிக்க துவங்கினார். ஒருவழியாக போராடி இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சினிமாவை கற்றுக்கொண்டார். புதிய பாதை திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து ஹிட் கொடுத்தார்.
இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய பார்த்திபன் ‘நான் ஒரு கதையை தயார் செய்து அர்ஜூன், பிரபு, மோகன் என பல நடிகர்களின் பின்னால் அலைந்தேன். பல போரட்டங்களுக்கு பின் பாபுஜி என்கிற தயாரிப்பாளர் கிடைத்தார். அவர் நடிகர் ரஜினியின் கால்ஷீட்டுக்காக அலைந்து கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் கடுப்பாகி ‘நீ உடனே ஒரு கதை ரெடி பண்ணு’ என்றார் ஒரு வாரத்தில் நான் எழுதிய கதைதான் புதிய பாதை. இதை ரஜினியை நேரில் சந்தித்து சொல்ல வேண்டும் எனக்கூறி என்னை அவரின் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
என்னை ஒரு நிமிடம் பார்த்த ரஜினி ‘பாபுஜி இப்போது என்னிடம் கால்ஷீட் இல்லை. நீங்கள் இவரை வைத்து மினிமம் பட்ஜெட்டில் ஒரு சிறிய படம் எடுங்கள். இவரின் கண்கள் நன்றாக இருக்கிறது. ஹீரோ போல இருக்கிறார்’ என சொன்னார். எனக்கும் பாபுஜிக்கும் ஒரே ஆச்சர்யம்.
ஏனெனில், அந்த கதையில் என்னையே நடிக்க சொல்லியிருந்தார் பாபுஜி. ரஜினி அப்படி சொன்னதும் ‘நாங்களும் அதைத்தான் உங்களிடம் சொல்ல வந்தோம்’ என பாபுஜி சொன்னதும் வாழ்த்து கூறி எங்களை அனுப்பி வைத்தார்’ என பார்த்திபன் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அந்த மாதிரி சீன் இருக்குனு சொல்லவே இல்ல!.. ‘விடுதலை’ பட நாயகி சொன்ன பகீர் தகவல்..