சூர்யாவுக்கு தொடர்ந்து ஏழரை கொடுக்கும் ரஜினி!.. சூப்பர்ஸ்டார் செய்வது சரியா?...
Vettaiyan: சினிமா என்பதே போட்டி பொறாமைகள் கொண்ட ஒரு தொழில்தான். மற்றவனை கீழே தள்ளியோ, அல்லது மிதித்து விட்டு சென்றோ மேலே வர வேண்டும் என பலரும் நினைக்கும் உலகம் அது. அதற்கு காரணம் கோடிகளில் புரளும் தொழில் சினிமா. நடிகராகவோ, இயக்குனராகவோ மாறிவிட்டால் நல்ல சம்பளம் வரும்.
நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யா. நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமாகி இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார். கடைசியாக தியேட்டரில் வெளியாகி மெகா வசூலை பெற்ற சூர்யா படம் சிங்கம் 2 மட்டுமே. அதன்பின் வெளியான சிங்கம் 3, காப்பான், என்.ஜி.கே. எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.
இதையும் படிங்க: இது சாதாரண ஸ்குவாடு இல்ல.. போட்டோ போட்டு கெத்து காட்டிய ‘விடாமுயற்சி’ டீம்
அதேநேரம், ஓடிடியில் வெளியான ஜெய் பீம் மற்றும் சூரரைப்போற்று ஆகிய 2 படங்களும் சூர்யாவுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. ஆனால், இந்த படங்கள் தியேட்டரில் வெளியாகவில்லை. கடந்த 2 வருடங்களாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்கிற படத்தில் நடித்தார். இப்படம் 2 பாகங்களாக வெளியாகவிருக்கிறது.
முதல் பாகம் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கங்குவா படத்தின் வெற்றி சூர்யாவுக்கு மிகவும் முக்கியம். அதோடு, இப்படம் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகவுள்ளதால் சூர்யாவை இப்படம் ஒரு பான் இண்டியா ஸ்டாராக மாற்றும் என அவர் நம்பிக்கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: வாடிவாசல் ட்ராப்புனு யாரும் சொல்லாதீங்க… சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்தான்!..
இந்நிலையில்தான், ரஜினியின் வேட்டையன் படமும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்டையன் படம் ஹிந்தியிலும் வெளியாவதால் கண்டிப்பாக சூர்யாவின் படம் அங்கு ஓடாது. இது சூர்யாவுக்கும் தெரியும். எனவே, என்ன செய்வது என யோசித்து வருகிறது படக்குழு.
சூர்யாவுக்கு ரஜினி ஏழரையை கொடுப்பது இது முதன்முறை அல்ல. பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் படம் ஹிட் அடித்தவுடன் அவரின் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. ஆனால், ரஜினி அழைத்ததால் ரஞ்சித் கபாலி படத்தை இயக்க போய்விட்டார். அது முடிந்த பின் மீண்டும் சூர்யா - பா.ரஞ்சித் இணையவிருந்தனர். ஆனால், ரஜினி மீண்டும் அழைக்க காலா படத்தை இயக்க போனார் ரஞ்சித்.
அதன்பின். சிறுத்தை சிவாவுடன் ஒரு படத்தில் இணையவிருந்தார் சூர்யா. ஆனால், ரஜினி அழைத்ததால் அங்கே போய் அண்ணாத்த படத்தை இயக்கினார் சிவா. ஒருவழியாக சிவாவுடன் மீண்டும் இணைந்து இப்போது கங்குவா படம் உருவாகி வெளியாகும் நேரத்தில் ரஜினியின் வேட்டையன் படம் ரிலீஸ் என்றால் அவருக்கு எப்படி இருக்கும்?..
ரஜினியுடன் மோத மாட்டேன் என கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சொல்லி இருப்பதால் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கங்குவாக்கு எதிராக வேட்டையனைக் களமிறக்கியது ரஜினி இல்லையாம்…! அப்போ யாரு அது?