Categories: Cinema News latest cinema news

Rajini: ரஜினி ஃபாலோ பண்ணும் அந்த விஷயம்!.. அந்த மனசுதான் கடவுள்!…

ஏவிஎம் சரவணன் சமீபத்தில் மரணமடைந்தார். தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை காலம் முதலே பல முக்கிய திரைப்படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி முதன்முதலாக நடித்த பராசக்தி படத்தை தயாரித்தது ஏவிஎம் நிறுவனம்தான்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பழ மொழிகளிலும் பல திரைப்படங்களை இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது. மெய்யப்ப செட்டியாருக்கு பின் தயாரிப்பு வேலைகளை அவரின் மகன் சரவணன் செய்து வந்தார். கடந்த பல வருடங்களாக இந்நிறுவனம் திரைப்படங்களை தயாரிக்கவில்லை. இந்நிலையில்தான் சரவணன் வயது மூப்பு காரணமாக மரணமடைந்திருக்கிறார்.

ஏவிஎம் சரவணன் இறந்த செய்தி கேட்டதும் நடிகர் ரஜினிகாந்த் அங்கு சென்று சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் இருந்திருக்கிறார். இந்நிலையில்தான் ரஜினிக்கும் ஏவிஎம் சரவணனுக்கும் இடையே இருந்த நட்பு தற்போது தெரிய வந்திருக்கிறது. ரஜினியை வைத்து முரட்டுக்காளை என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தது ஏவிஎம் நிறுவனம்.

அப்போது முதலே ஏவிஎம் சரவணனுக்கு ரஜினி நெருக்கமானார். அதன்பின் ரஜினியை வைத்து பாயும்புலி, நல்லவனுக்கு நல்லவன், போக்கிரி ராஜா, மனிதன், ராஜா சின்ன ரோஜா, எஜமான், சிவாஜி உள்ளிட்ட பல படங்களையும் ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. ஏவிஎம் சரவணன் கடந்த சில வருடங்களாகவே படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரஜினி அவரின் வீட்டுக்கு சென்று அவருடன் நேரம் செலவழித்திருக்கிறார்.

ஏவிஎம் சரவணனுக்கு மட்டும் அல்ல. எம்.ஜி.ஆரை வைத்து எங்க வீட்டு பிள்ளை படத்தை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் விஜயவாகினி ஸ்டுடியோ நாகி ரெட்டியார் கடைசி காலத்தில் படுக்கையில் இருந்தபோதும் ரஜினி அவரின் வீட்டிற்கு சென்று சில மணி நேரங்கள் அவருடன் செலவழித்திருக்கிறார்.

அதேபோல், தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குனர் கே.பாலச்சந்தர் கடைசி காலத்தில் நினைவு தப்பியிருந்த போதும் கமலுடன் சென்று ரஜினி அவருடன் பேசி அவரின் நினைவுகளை திரும்ப கொண்ட வர முயற்சி செய்திருக்கிறார். இதை இன்றைய இளம் நடிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Published by
சிவா