என் தலையெழுத்து!.. உங்களை தேடிவர வேண்டி இருக்கு!. ரஜினியின் முகத்துக்கு நேரா சொன்ன ராதாரவி...
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் வில்லனாக கலக்கியவர் ராதாரவி. 35 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்து வருபவர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். எம்.ஆர்.ராதாவின் மகனான ராதாரவி அவரைப்போலவே அசத்தலான வில்லத்தனம் காட்டி ரசிகர்களை கவர்ந்தவர்.
அதேபோல், மனதில் பட்டதை அப்படியே பேசும் பழக்கமுடையவர். கடந்த சில வருடங்களாகவே சினிமா தொடர்பான பல நிகழ்ச்சிகளில் இவரை பேச அழைக்கின்றனர். அந்த விழாக்களில் அவர் பேசும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வைரலாவதுண்டு.
இந்நிலையில், ரஜினியிடம் தனக்கு நேர்ந்த அனுபவத்தை ராதாரவி பேசியுள்ளார். அருணாச்சலம் திரைப்பம் உருவான போது அப்படத்தை முதலில் பி.வாசு இயக்கவிருந்தார். அதன்பின், சுந்தர். சி யிடம் சென்றது. கதையும் மாறிவிட்டது. முதலில் அப்படத்தில் ராதாரவி நடிக்கவிருந்தார். கதையில் மாற்றம் செய்யப்பட்டு அவர் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.
இதுபற்றி பேசிய ராதாரவி. ரஜினி என்னை நேரில் அழைத்து ‘இயக்குனரும் மாறிவிட்டார். கதையும் மாறிவிட்டது. இப்படத்தில் 3 வில்லன்கள் நடிக்கிறார்கள். எனவே, இதில், நீங்கள் நடித்தால் நன்றாக இருக்காது’ என சொன்னார். ஒரு நடிகராக இருந்து பார்த்தால்தான் அது புரியும்.
என்னடா ரஜினி முகத்துக்கு நேராக இப்படி சொல்கிறாரே என எனக்கு கோபம் வந்தது. அவரிடம் சொன்னேன் ‘சினிமாவோட தலையெழுத்து என்ன தெரியுமா சார்.. அதிர்ஷ்டத்தை தேடி திறமை வர வேண்டியிருக்கு’ என சொன்னேன்.. நான் சொன்னது முதலில் ரஜினிக்கு புரியவில்லை. அப்புறம் அவரை அதிர்ஷடம் என்றும், என்னை திறமை என்றும் நான் சொன்னதை புரிந்துகொண்ட ரஜினி ‘அடேங்கப்பா.. அடேங்கப்பா’ என சிரித்தார் என ராதாரவி கூறினார்.
இதையும் படிங்க: ரேவதியின் வீழ்ச்சிக்கு இந்த முக்கிய சம்பவம்தான் காரணம்…! கொஞ்சம் உஷாரா இருந்திருக்கலாம்…