நண்பர்களுக்காக ரஜினி தயாரித்து நடித்த படம்!... இப்படி ஒரு தங்க மனசுக்காரரா ரஜினி?!..

Rajini: திரையுலகில் சுயநலம் என்பது எப்போதும் அதிகம். தான் வளர வேண்டும்.. தனக்கு மட்டுமே பெயர் கிடைக்க வேண்டும்.. தனக்கு மட்டுமே அதிக லாபம் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் பலர். ஆனால், அதையும் தாண்டி அந்த துறையில் விஜயகாந்தை போல அரிதான மனிதர்களும் இருந்தார்கள்.

நட்புக்காக பலரும் பலரையும் செய்திருக்கிறார்கள். விஜய் சேதுபதியெல்லாம் நட்புக்காகவே பல படங்களில் நடித்திருக்கிறார். தனக்கு நன்றாக தெரிந்து அதேநேரம் மிகவும் கஷ்டப்படும் பலருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அஜித் கூட அப்படித்தான். தனக்கு நன்கு பழக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்.

இதையும் படிங்க: தலைப்புக்காகவே ரஜினி நடித்த படம்!.. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு செண்டிமெண்ட்டா?!..

இதில் விஜய் வேறுமாதிரி. தனது நண்பர்களுக்கு எந்த வகையிலும் வாய்ப்புகளை வாங்கி கொடுக்க மாட்டார்கள். நண்பர்கள் என்ன? உறவினர்களுக்கே எந்த உதவியும் செய்யமாட்டார். உறவுகளோடே எப்போது ஒட்டாமல் இருப்பார். இதில், ரஜினி வேறு மாதிரி. நண்பர்கள் மூலம் சினிமாவுக்கு வந்ததால் நட்புக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பவர்.

இப்போதும் எப்போது கர்நாடகா போனாலும் அவர் தங்குவது தனது பழைய நண்பனின் வீட்டில்தான். குசேலன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அவர் சொல்லும் நண்பனின் கதை அவரது வாழ்வில் நடந்த கதையில் தொடர்புடையதுதான். ரஜினிகாந்த் பீக்கில் இருந்த போது நண்பர்களுக்காகவே அவர் தயாரித்த திரைப்படம்தான் வள்ளி.

இதையும் படிங்க: ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி – கமல் நடிக்கவிருந்த படம்!.. டிராப் ஆனதுக்கு காரணம் இதுதான்!..

இந்த கதையை ரஜினியே எழுதினார். இப்படத்தின் மூலம் வரும் லாபத்தை விட்டல், தும்பு, பிரதீப், ராஜ்பகதூர், ரவீந்தர நாத், ரகுநந்தன் என எல்லோருக்கும்ன் பிரித்து கொடுத்தார். முதலில் இந்த படத்தில் ரஜினி நடிப்பதாக இல்லை. ஆனால், நீ நடிக்காமல் அந்த பணம் எங்களுக்கு வேண்டாம் என நண்பர்கள் சொல்ல ரஜினி சில காட்சிகளில் நடித்தார். அந்த படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் லாபமான படம்தான்.

valli

இப்படி திரையுலகில் நண்பர்களுக்காக படம் எடுத்த ஒரே நடிகர் ரஜினி மட்டுமே. அதேபோல், நண்பர்களுக்காக வள்ளி படத்தை எடுத்த ரஜினி வி.கே.ராமசாமி போன்ற சில மூத்த கலைஞர்களுக்காக அருணாச்சலம் படத்தை எடுத்து அந்த லாபத்தை அவர்களுக்கு பிரித்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இதனாலதான் நான் உங்க படத்துல நடிக்கல!. கேள்வி கேட்ட ரஜினியிடம் கேப்டன் சொன்ன நச் பதில்..

 

Related Articles

Next Story