ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படுபவர் ரஜினி. பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை செய்து நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து, திரைப்படக் கல்லூரியில் படித்து பாலச்சந்தர் அறிமுகம் கிடைத்து அவர் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அபூர்வராகங்கள் படத்தில் தொடங்கி பல திரைப்படங்களிலும் நடத்துவிட்டார். கடந்த 50 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார் ரஜினி. அதிலும் 74 வயதிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அடுத்து யார் இயக்கத்தில் அவர் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ரஜினிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யா திரைப்படங்களை இயக்கி வருகிறார். சௌந்தர்யா திரைப்படங்களை தயாரித்து வருகிறார். கோச்சடையான் என்ற படத்தையும் இயக்கினார்.

ஒரு பேட்டியில் ‘நமக்கு ஒரு மகன் பிறக்கவில்லையே என்கிற ஏக்கம் உங்களுக்கு இருக்கிறதா’ என்று ரஜினியிடம் கேட்டதற்கு அப்படி எந்த ஏக்கமும் எனக்கில்லை. மகள்கள்தான் எனக்கு சந்தோசம்.. அதிலும் மூத்த மகள் ஐஸ்வர்யா என் தாய் போல என்னை பார்த்துக் கொள்கிறார்’ என்றெல்லாம் மகிழ்ச்சியாக பேசியிருந்தார். இந்நிலையில்தான் திரைப்படம் மற்றும் சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை கூறி இருக்கிறார்.

என் கணவருக்கு என்மீது பாசம் கிடையாது. ஆனால் அவரின் மகன்களின் மீது பாசமாக இருப்பார். ஒருமுறை அவர் சூட்டிங்கில் இருந்த போது ரஜினி சார் அவரிடம் ‘உனக்குதான் நாலு பசங்க இருக்காங்களே.. எனக்கு ஆம்பள பசங்களே இல்ல.. ஒரு பையனை எனக்கு தத்துக் கொடு’ என்று கேட்டார். ஆனா கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை செய்யமாட்டேன்னு என் கணவர் சொல்லிட்டாரு’ என சொல்லி இருக்கிறார்.
