மனுஷன் ஃபுல் ஃபார்ம்ல இருக்காரு போலயே!.. அந்த இயக்குனருடன் இணையும் சூப்பர் ஸ்டார்?..

Published on: December 2, 2024
rajinikanth
---Advertisement---

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Actor Rajinikanth: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டிய நிலையிலும் தற்போது வரை ஹீரோவாக நடித்து அசதி வருகின்றார். அதிலும் இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்த்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார்.

இதையும் படிங்க: அடுத்த படத்துக்கு வேறலெவல் ஸ்கெட்ச் போட்ட அட்லீ!.. பட்ஜெட் எவ்வளவு கோடி தெரியுமா?…

வேட்டையன் திரைப்படம்:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் எல் ஞானவேல் இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. லைக்கா நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் வசூலிலும் பெரிய அளவு சாதனை படைக்கவில்லை.

vettaiyan movie
vettaiyan movie

லோகேஷுடன் கூலி:

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். நடிகர் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகீர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

மேலும் பாலிவுட்டியில் இருந்து அமீர்கானை நடிக்க வைப்பதற்கும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைய உள்ள நிலையில் அடுத்த ஆண்டு மே மாதம் இப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். லோகேஷ் உடன் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணி என்பதால் இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ரஜினிகாந்தின் லைன் அப்:

கூலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 என்கின்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.  நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஏற்கனவே வெளியான ஜெயிலர் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார் நடிகர் ரஜினிகாந்த்.

manirathnam
manirathnam

இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக எந்த இயக்குனர்கள் இணைய போகிறார் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகின்றது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக பேச்சுவார்த்தை அடிபட்டு வந்தது. இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை.

இதையும் படிங்க: Biggboss Tamil: பொதுவெளியில் கேவலப்படுத்தும் நீங்க ஒரு தொகுப்பாளரா? விஜய் சேதுபதியை வெளுத்த பிரபலம்!..

இவர்களின் கூட்டணியில் வெளியான தளபதி திரைப்படம் இன்றளவும் கிளாசிக்கல் ஹிட்டாக இருந்து வருகின்றது. இதனால் மீண்டும் ரஜினிகாந்த் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

சமீபத்தில் மாரி செல்வராஜ் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து கதை கூறியதாகவும், அந்த கதை பிடித்த காரணத்தால் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற இருப்பதாக கூறப்படுகின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது ரஜினியின் பிறந்தநாள் அன்று தெரியவரும்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.