நடிகர் ராஜ்கிரணை பாதியிலயே கழட்டி விட்ட படக்குழு...! பிரபல கிங் நடிகரும் இதற்கு உடந்தை..!

பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வெளியான திரைப்படம் தான் பிதாமகன். இந்த படத்தில் சூர்யா, லைலா,சங்கீதா மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். நடிகை சிம்ரன் ஒரு கெஸ்ட் ரோலில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருப்பார்.
இந்த படம் விக்ரமுக்கு சினிமா வாழ்க்கையில் மற்றுமொரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.ஏற்கெனவே அதே பாலா இயக்கத்தில் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ரி கொடுத்த படம் தான் சேது. அந்த படத்திலிருந்து தான் இவருக்கு மார்க்கெட் கடகடவென ஊயர ஆரம்பித்தது.
இந்த படத்தில் நடிகர்களை தேர்வு செய்வதில் நீண்ட நாள்களாக இழுபறியிலயே இருந்துள்ளனர். இந்த படத்தில் ஒரு ஜெயில் காட்சியில் ஜெய்லராக மீசை ராஜேந்திரன் உண்மையான போலீஸ் போலவே அட்டகாசமாக நடித்திருப்பார். இவர் அதிகமாக விக்ரம் படங்களில் அடிக்கடி காணப்படுவார்.
இப்படி இருக்கையில் இந்த ஜெயிலர் கதாபாத்திரத்திற்கு முதலில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் ராஜ்கிரணாம். அவர் சூட்டிங்கில் இருந்த சமயமே மீசை ராஜேந்திரன் செட்டிற்கு வந்துள்ளார். அப்போது ராஜ்கிரண் நடித்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தாராம். சூட்டிங் முடிந்ததும் ராஜ் கிரண் போய்விட்டாராம். அதன்பின் பாலாவும் விக்ரமும் தனியா போய் பேசிவிட்டு ராஜேந்திரனை அழைத்து ஜெயிலர் கதாபாத்திரம் நீதான் பண்ணனும்னு சொன்னாராம் இயக்குனர். இதை மீசை ராஜேந்திரனே ஒரு பேட்டியில் கூறினார்.