“என்ன நடந்தாலும் இதை மட்டும் பண்ணிடாதீங்க”… தனது பிள்ளைகளிடம் சத்தியம் வாங்கிய சூப்பர் ஸ்டார்… என்னவா இருக்கும்??

Rajinikanth and Puneeth Rajkumar
தமிழ் சினிமாவில் எப்படி எம்.ஜி.ஆர் ஒரு சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வந்தாரோ அதே அளவு புகழுடன் கர்நாடகாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வந்தவர் ராஜ்குமார்.
1929 ஆம் ஆண்டு தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர் ராஜ்குமார். இவர் 1942 ஆம் ஆண்டு “பக்த பிரகலாதா” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல கன்னட திரைப்படங்களில் நடித்த ராஜ்குமார், கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.

Rajkumar
ராஜ்குமார் பர்வதம்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு சிவராஜ்குமார், ராகவேந்திரா, புனித் ராஜ்குமார், லட்சுமி, பூர்ணிமா ஆகியோர் பிறந்தனர். இதில் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோர் கர்நாடகாவின் டாப் நடிகர்களாக உயர்ந்தனர். புனித் ராஜ்குமார் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மரணமடைந்தார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள்.

Puneeth Rajkumar
இதனிடையே கடந்த 2000 ஆம் ஆண்டு ராஜ்குமார், சந்தன கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை உண்டு செய்தது. மேலும் இரு மாநிலங்களுக்கிடையே பெரும் சர்ச்சைகளும் வெடித்தன. எனினும் சில மாதங்களில் ராஜ்குமார், வீரப்பனால் எந்த வித துன்புறுத்தலும் இன்றி விடுவிக்கப்பட்டார். ராஜ்குமாரை ஏன் வீரப்பன் கடத்தினார் என்பதற்கான காரணம் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: “அந்த இயக்குனரின் பெயர் மிஸ்ஸிங்”… விருது வழங்கும் விழாவுக்கே வர மறுத்த எம்.ஜி.ஆர்… யாரா இருக்கும்??

Rajkumar
இவ்வாறு கர்நாடக மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருந்த ராஜ்குமார், கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த உலகத்தை விட்டு உயிர்நீத்தார். இந்த நிலையில் நடிகர் ராஜ்குமார் ஒரு நாள் தனது மனைவி, மகன்கள், மகள்கள் ஆகியோரை அழைத்து தனது கையை நீட்டி, “எக்காரணத்தை கொண்டும் கர்நாடகா அரசியலுக்குள் நுழையக்கூடாது. எனது வார்த்தையை யாரும் மீறமாட்டோம் என சத்தியம் செய்யுங்கள்” என கூறினாராம். அதன் படி அனைவரும் சத்தியம் செய்தனராம். அது மட்டுமல்லாது அந்த சத்தியத்தின்படியும் நடந்தார்களாம்.