Connect with us

Cinema History

சாமானியனில் 4 ஹீரோக்கள் யார் யார்னு தெரியுமா? சுடச் சுடச் சொல்கிறார் மக்கள் நாயகன்

இது மக்கள் நாயகனுக்கு இரண்டாவது இன்னிங்ஸ். முதல் இன்னிங்ஸில் பட்டையைக் கிளப்பி ரஜினி, கமலுக்கே சவால் விட்டார். இவர் படங்கள் என்றாலே வெள்ளி விழாவும், வெற்றிவிழாவுமாகத் தான் இருந்தன. பாடல்களோ தேன் சொட்டும் ரசனை கொண்டவை. தாய்க்குலங்களின் பேராதரவை அதிகளவில் பெற்று முன்னணியில் இருக்கும் ஹீரோ. டவுசரையும் தலையில் ஒரு துண்டையும் கட்டிக்கொண்டு நடித்து சாதனை படைத்த ஒரே நடிகர் ராமராஜன் தான். அதே போல் சட்டையிலும் தனக்கென தனி கலரை பிராண்டாகக் கொண்டு பட்டையைக் கிளப்பினார்.

இவ்வளவு நாளா மக்கள் நாயகன் நடிக்காம இருந்ததுக்கு என்ன காரணம் என்றால் அவர் முன்னணி நாயகனாக நடிக்கவே விரும்பினார் என்பதும் அப்படிப்பட்ட கதை அம்சங்கள் அவருக்கு வரவில்லை என்றும் தெரிகிறது. தொடர்ந்து அவரைத் தேடி வந்த கதை தான் சாமானியன் என்கிறார் இயக்குனர் ராகேஷ்.

Ramarajan

தொடருமா இவரது வெற்றி என்பதை சாமானியன் சொல்லட்டும். தொடரும் இவர் திரைப்பயணம் குறித்து பகிர்கிறார் ராமராஜன்.

ஆரம்பத்தில இருந்தே என் கூட நல்ல பழக்கம். நான் அவரு கூட நடித்த என்னை விட்டுப் போகாதே, பொங்கி வரும் காவேரி, ராசாவே உன்னை நம்பி மூணு படமே ஹிட்டு. இது நாலாவது படம். கிட்டத்தட்ட 89க்குப் பிறகு இப்ப தான் ஆக்ட் பண்றேன் அவரு கூட.

எனக்கு ரொம்ப சந்தோஷம்….ரவி அண்ணன் கூட நடிக்கிறது. அதே மாதிரி தான் எம்.எஸ்.பாஸ்கர். இதுல யாரு ஹீரோ அப்படின்னு கேக்கலாம். இதுல ஹீரோ வந்து கதையும் திரைக்கதையும் தான். இரண்டாவது ஹீரோ சாமானியன் டைட்டில்.

methai ramarajan

இந்தப்படத்துல எனக்கு ஜோடி இல்ல. யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க…என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்கன்னா மாதிரி ஆரம்பத்தில இருந்து இன்னைக்கு வரைக்கும் அத்தனை வெற்றிப்படங்கள். நம்ம ஊரு நல்ல ஊருலருந்து பாட்டுக்காரன்லருந்து 20 படம் கன்டினியுவா ஹிட் கொடுத்த ஹீரோன்னா அதுக்குக் காரணம் தமிழக தாய்மார்களும், மன்றங்களும், மன்ற சகோதரர்களும் தான். எனக்கு வந்து மனசார பாராட்டணும்னா அது எந்த விஷயமானாலும் இருக்கட்டும்.

சினிமாவோ, அரசியலோ பொது வாழ்க்கையோ, பொதுநிகழ்ச்சியோ மக்கள்ட்ட கொண்டு போய் சேர்க்கிற ஒரே மூலதனம் பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் தான். இவை இல்லேன்னா மக்களிடம் எப்படி போய்ச் சேரும்? அப்படிப்பட்ட பத்திரிகையாளர்களைப் பாராட்டியே தீர வேண்டும். தெரிஞ்சோ தெரியாமலோ மேதை ஆக்ட் போதே நினைச்சேன். 44 படம் ஹீரோ ஆயிட்டம்பா…

Samaniyan 2

5 வருஷமா தியேட்டர்ல வேலை செஞ்சேன். டிக்கெட் கிழிக்கிறது, கொடுக்கறது, கேஷியர், ஆபரேட்டர் அத்தனையும் போஸ்டர் ஒட்டறது, பெயிண்ட் பண்றதுன்னு எல்லா வேலையையும் 5 வருஷமா பார்த்துட்டு மெட்ராஸ்க்கு வந்து ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டு டைரக்டர்ட்ட அசிஸ்டண்ட் டைரக்டராகி 40 நாள் வேலை செஞ்சி அதுக்கு அப்புறம் ஹீரோவாகி இத்தனை வருஷமா ஒர்க் பண்ணிருக்கிறேன்.

அத்தனை படங்களும் ஒர்க் பண்ணி எப்படி சொல்றதுன்னு தெரில. இதை வந்து எல்லாரும் சொல்லும்போது சந்தோஷமாத்தான் இருக்கு. ஹீரோவாத் தான் நடிப்பாராம்… நான் என்ன சொன்னன்னு தெரியல. ஆனா அப்படி போட்டது நல்லதாப் போச்சு. அவரு மனசுல நான் வந்துருக்கேன் பாருங்க. அது நல்லதாப் போச்சு.

ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தைக் கொல்லும்னு சொல்வாங்க. இந்தப்படத்துக்கு முதல் ரெண்டு ஹீரோ யாருன்னு சொன்னேன். இந்தக் கதைக்கு, திரைக்கதைக்கு நான் நடிச்சா நல்லாருக்கும்னு தைரியத்தோடயும், தன்னம்பிக்கையோடயும் வந்த அண்ணன் வி.மதியழகனும், டைரக்டர் ராகேஷ்சும் மூணாவது ஹீரோ. நாலாவது ஹீரோ தான் நானு, பாஸ்கரன் அண்ணன். அப்போ நான் அசிஸ்டண்ட் டைரக்டரா இருக்கும்போது அவரு டப்பிங் ஆர்டிஸ்ட்.

இந்தப்படத்துல புல்லா வர்றாரு. ஆனா சாமானியன்னு டைட்டில் வைச்சிட்டு அதென்ன துப்பாக்கியால சுடுறதுன்னா அது தான் படத்தோட கதையின் கரு. எல்லாருக்கும் தெரியும். என் தாய்மார்களுக்கெல்லாம். ராமராஜன் துப்பாக்கியைப் புடிச்சிட்டு என்ன பண்ணுவாரு. அவர் வயக்காட்டுல இருந்தவராச்சே…

கிராமத்துல இருந்தவராச்சே. இவரைக் கொண்டு போயி துப்பாக்கின்னு யோசிப்பாங்க. ஏதோ இருக்குடா…இல்லன்னா இந்த ஆளு ஒத்துக்க மாட்டான். ஏதோ நினைச்சிக்குவான். ஆனா இது வந்து உண்மையிலேயே அவரோட தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் பாராட்டணும்.

ஒவ்வொரு தயாரிப்பாளரக்கும் அந்தத் தன்னம்பிக்கையும் தைரியமும் வந்தா சினிமா உலகம் ஓஹோன்னு இருக்கும்.

google news
Continue Reading

More in Cinema History

To Top