ராமராஜன் நடிக்கும் புதிய படம்.. செம டைட்டில்.. அவங்கதான் ஹீரோயினாம்!....

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ராமராஜன். நம்ம ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு காவல்காரன் என இறங்கி அடித்தவர். 80களில் இவர் நடித்து வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இவருக்கு பெண் ரசிகைகளும் உருவாகினார்கள். கிராமப்புறங்களில் இவரின் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருந்தது.

ramarajan

ramarajan

குறிப்பாக ராமராஜன் - கனகா நடித்து வெளியான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுக்கும் நடிகராக ராமராஜன் இருந்தார். இவரின் படங்கள் ஓடுவதை பார்த்து அவர்களே கொஞ்சம் பயந்தது உண்மை. நடிகை நளினியை இவர் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

ஒருகட்டத்தில் மனைவி நளினியை பிரிந்தார். அதன்பின் அவரின் படங்கள் சரியாக ஓடவில்லை. ஒருபக்கம், தீவிர அரசியலிலும் ஈடுபட்டார். இதனால் 2012க்கு பின் அவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. 10 வருடங்கள் கழித்து தற்போது ‘சாமானியன்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், ராமராஜன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த படத்திற்கு உத்தமன் என்கிற தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த படத்தில் ராமராஜன் வழக்கறிஞராக நடிக்கவுள்ளாராம். கார்த்திக் எனும் புதிய இயக்குனர் இயக்கவுள்ளார். அதோடு, கதாநாயகியாக மீனாவை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it