Cinema History
பார்த்திபன் சொன்ன கதையை கேட்டு மெர்சல் ஆயிட்டேன்!.. ராமராஜன் சொல்றதை கேளுங்க!..
அட பார்த்திபனுக்கும் ராமராஜனுக்கும் என்ன சம்பந்தம்னுதான யோசிக்கிறீங்க!.. சினிமால எல்லாத்துக்குமே சம்பந்தம் இருக்கு. பல பேர் பலருடனும் நெருக்கமா பழகி இருப்பாங்க.. ஆனா, அது அவங்க வெளிய சொல்ற வரைக்கும் வெளிய தெரியாது. ராமராஜன், பார்த்திபன் இருவரும் சினிமாவில் ஒரே நேரத்தில் வளர்ந்தவங்கதான்.
ராமராஜன் மதுரை மேலூர்ல இருக்க ஒரு தியேட்டர்ல வேலை செஞ்சிட்டு இருந்தாரு. அந்த தியேட்டர் ஓனர் மூலமாக சென்னை வந்து இராமநாராயணன் ஆபிஸ்ல ஆபிஸ் பாயா வேலை பாத்தாரு. அப்புறம் இராமநாராயணன்கிட்டையே உதவி இயக்குனரா சேர்ந்துட்டாரு. அப்படி பல படங்கள்ல வேலை செஞ்சிட்டு அப்புறம் சினிமாவுல ஹீரோவாக நடிக்க ஆரம்பிச்சாரு. அரை டவுசர் போட்டு நடிச்சாலும் அவர் படத்துக்கு கூட்டம் செமயா கூடுச்சி.
இதையும் படிங்க: அதை நினைச்சா அடிவயிற்றில் நெருப்பைப் போட்டு பிசைவது போல இருக்கு…. சிவாஜியா இப்படி சொல்வது?
இந்த பக்கம் சினிமா ஆசையில சென்னை வந்து ஆனா சென்னைக்கு வெகுதூரம் இருக்க ஒரு ஊர்ல நாடகத்துல நடிச்சிக்கிட்டு இருந்தார் பார்த்திபன். ஒருவழியா பாக்கியராஜிகிட்ட உதவி இயக்குனரா சேர்ந்த பின்னாடிதான் அவர் நினைச்சது எல்லாம் நடந்துச்சி. முதல்ல நாமும் ரஜினி மாதிரி ஆகணும்னுதான் ஆசைப்பட்டாரு.
ஆனால், பாக்கியராஜ்கிட்ட வேலை செய்யும் போது இயக்கம் பற்றி நிறைய கத்துக்கிட்டாரு. அதுல ஆர்வம் அதிமாயிடுச்சி. அவர் முதல்ல எழுதின புதிய பாதை படத்துல அவர் நடிக்கனும்னு ஆசைப்படவே இல்லை. கமல், ரஜினி உட்பல பல ஹீரோக்கள்கிட்ட அந்த கதையை சொன்னாரு. பார்த்திபனே வச்சி இந்த படத்த பண்ணுங்கன்னு தயாரிப்பாளர்கிட்ட சொன்னதே ரஜினிதான். அப்புறம் புதிய பாதை படத்துல பார்த்திபனே நடிச்சாரு.
இதையும் படிங்க: திடீரென ஏற்பட்ட கார் விபத்து… மனைவியுடன் விவாகரத்து!.. போராடி மீண்டு வந்த ராமராஜன்!…
பல வருஷம் கழிச்சி சாமானியன் அப்டின்னு ஒரு படத்துல நடிச்சிருக்காரு ராமராஜன். இந்த படத்தோட டிரெய்லர் கூட பலருக்கும் பிடிச்சிருக்கு. பல வருஷம் கழிச்சி ராமராஜன் படம் வரதால எதிர்பார்ப்பு எகிறி இருக்கு. இந்நிலையிலதான் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்காரு ராமராஜன்.
அதுல, நானும் பார்த்திபனும் நல்ல நண்பர்கள். சினிமால முயற்சி பண்ணும்போது அடிக்கடி சந்திச்சி பல விஷயங்கள் பேசுவோம். ஒன்னாவே நடந்து தியேட்டருக்கு போய் படம் பார்ப்போம். அப்போ பூவுல போய் என்ன ஜாதி?.. எதுக்கு ஜாதி மல்லின்னு பேரு?.. அப்டின்னு ஒரு கதை சொன்னாரு. கேட்டு மிரண்டு போயிட்டேன்’ அப்படின்னு நம்ம ராமராஜன் சொல்லி இருக்காரு.