More
Categories: Cinema News latest news

நான் அப்பவே இறந்திருப்பேன்! உருக்கமாக பேசிய ராமராஜன்.. இப்படியெல்லாம் நடந்திருக்கா

Actor Ramarajan: மக்கள் நாயகன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ராமராஜன். உதவி இயக்குனராக பணிபுரிந்து பின் நடிகராக மாறினார். ஆரம்பத்தில் இயக்குனராக வேண்டும் என்பதே ராமராஜனின் ஆசையாக இருந்தது. மதுரையை சேர்ந்த ராமராஜன் அங்கு உள்ள டூரிங் டாக்கீஸில் வேலை செய்து வந்தார். பின்னர் ஒரு திரையரங்கிலும் டிக்கெட் கிழிக்கும் பணியில் சேர்ந்தார்.

பின் சென்னைக்கு வரும் போதெல்லாம் தன் தியேட்டர் முதலாளியின் சிபாரிசில் பல பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு ராமராஜனுக்கு கிடைத்தது. அதன் காரணமாக ஒரு படத்தில் கிராமத்து இளைஞனாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். பின் படிப்படியாக வளர்ந்து ஒரு ஹீரோ அந்தஸ்தை பெற்றார். தியேட்டரில் வேலை செய்துவந்த ராமராஜன் பின்னாளில் தியேட்டர் முதலாளியானார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ரூம்!.. ஆனா கையேந்தி பவன் சாப்பாடு!.. ஏ.ஆர்.முருகதாஸ் பட்டபாடு!…

அவரின் கெரியரில் காலங்காலமாக நின்று பேசும் படமாக அமைந்தது கரகாட்டக்காரன் திரைப்படம்.ராமராஜனின் பெரும்பாலான படங்கள் வெற்றியடைவதற்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணமாக அமைந்தது. அதனாலேயே இப்போதும் கூட அவர் நடிக்கும் சாமானியன் படத்திற்கும் இளையராஜாதான் இசை. இந்தப் படத்திற்கும் தனக்கு பாடல் வேண்டாம் என ராமராஜன் சொன்னாராம்.

ஆனால் இளையராஜாதான் ‘ இசையின் மூலம்தான் நம் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் உனக்கு இந்தப் படத்தில் பாடல் வைக்கிறேன்’ என சொல்லி இரண்டு பாடல்களை ராமராஜனுக்கு வைத்திருக்கிறாராம் இளையராஜா. இந்த நிலையில் ராமராஜன் அவருடைய வாழ்க்கையில் நடந்த துயரமான சம்பவத்தை பற்றி பகிர்ந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: படப்பெட்டியை கொளுத்த நினைத்த கலைஞர்!.. புத்திசாலித்தனமாக முறியடித்த மக்கள் திலகம்!..

ராமராஜன் மற்றும் கௌதமி நடித்த ‘எங்க ஊரு காவக்காரன்’ படத்தில் வில்லன் கௌதமியை கடல் வழியாக பாராசூட்டில் கடத்தி செல்வாராம். அவரை காப்பாற்றி ராமராஜன் அழைத்து வரவேண்டும். ஆனால் ராமராஜன் முதலிலேயே ‘இதெல்லாம் நமக்கு செட்டாகாது. க்ளோசப்பில் என்னை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லியும் கேட்காத படக்குழு பாராசூட்டில் ராமராஜனையும் ஏற்றி விட்டார்களாம்.

போட் நகர நகர பாராசூட் பறக்கும். போட் நகரவில்லை என்றால் பாராசூட் கீழே விழுந்துவிடுமாம். அதே போல் அன்று போட் நகரவில்லையாம். அதனால் கடலிலேயே ராமராஜன் விழுந்தாராம். பாராசூட்டின் மேல் துணி நேராக அவர் மீது விழுந்திருந்தால் மூச்சுத் திணறி இறந்திருப்பாராம். நல்ல வேளையாக காற்று பலமாக அடித்ததனால் துணி சைடு வாக்கில் விழ தண்ணீருக்குள் ராமராஜன் தத்தளித்துக் கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க: பணம் தேவைக்கு அதிகமா இருந்தா இப்படி எல்லாம் நடக்கும்!… விஜய் ஆண்டனி கொடுத்த புதுவிளக்கம்

காப்பாற்றுங்கள் என கத்த படக்குழு மற்றொரு போட்டில் வந்து ராமராஜனை காப்பாற்றியதாம். கொஞ்சம் தாமதமாகியிருந்தால் அன்றே என் வாழ்க்கை முடிந்திருக்கும் என ராமராஜன் கூறினார்.

Published by
Rohini

Recent Posts