ரம்பாவை பின்னால் தட்டிய ரஜினி!. வெளியான வீடியோவால் ஹேஷ்டேக்கில் வந்த தலைவர்...

90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. ஆந்திராவை சேர்ந்த இவர் வாளிப்பான தேகத்தை காட்டி தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல படங்களிலும் நடித்தார். அம்மணியின் கட்டழகை ரசிப்பதற்காகவே காஜி ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தார்கள்.
சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் நடித்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம்தான் இவரை ரசிகர்களிடம் பிரபலமானார். இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் மார்லின் மன்றோ போல பாவாடையை பறக்கவிட்டு கையால் மூடி இவர் கொடுத்த போஸ் 70,80 கிட்ஸ்களை தூங்கவிடாமல் செய்தது.
இதையும் படிங்க: இந்தியன் 2 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இவ்வளவு கோடி செலவா? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்…
அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். குறிப்பாக இவரின் தொடையழகிலேயே பலரும் சொக்கிப்போனார்கள். விஜயுடன் மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல் ஆகிய படங்களில் நடித்தார். ராசி எனும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார்.
பல படங்களிலும் நடித்த ரம்பா மார்க்கெட் இழந்ததால் திருமணமாகி இப்போது 3 குழந்தைக்களுக்கு அம்மா ஆகிவிட்டார். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்று பேட்டி கொடுத்தார். அதில், திரையுலகில் தனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். அதில் ஒன்றுதான் இப்போது ரஜினியை பிடிக்காதவர்களுக்கு தீனியாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: நடிகர்கள் எல்லாம் ஷூட்டிங் போகலை…ஃபேமிலி டூருப்பா… அடுத்த ப்ளான் இதான்..வெளுத்துவிட்ட பிரபலம்..!
நான் ரஜினி சாருடன் அருணாச்சலம் படத்தில் நடித்தபோது பாலிவுட்டில் சல்மான்கானுடன் ஒரு படத்தில் நடித்து வந்தேன். அப்போது மும்பை வந்த ரஜினி படப்பிடிப்பில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என பார்த்தார். அதன்பின் ஒருநாள் அருணாச்சலம் படப்பிடிப்பில் காரசாரமான விவாதம் போனது. அதற்கு நான்தான் காரணம் என சொன்னார்கள்.
ஹிந்தி நடிகர்கள் என்றால் கட்டியணைத்து பேசுகிறீர்கள். நாங்கள் மட்டும் என்ன இளக்காரமா என ரஜினி ஆரம்பித்தார். அதன்பின்னர்தான் அவர் என்னிடம் விளையாடுகிறார் என புரிந்துகொண்டேன். படப்பிடிப்பு நடந்தபோது திடிரென விளக்குகள் அணைக்கப்பட்டது. என் பின்னால் யாரே தட்டினார்கள். நான் கத்திவிட்டேன். அதன்பின் லைட் போடப்பட்டது. ரம்பாவை தட்டியது யார் என ஒரே களோபரமானது. ஆனால், அதை செய்தது ரஜினி சார்தான் என்பது பின்னால்தான் தெரிந்தது. இப்படி அந்த படத்தின் படப்பிடிப்பு ஜாலியாக நடந்தது’ என ரம்பா சொல்லியிருந்தார்.
இதையடுத்து ரஜினியை பிடிக்காத சிலர் #ரம்பாவிடம்அத்துமீறிய_ரஜினி என்கிற ஹேஷ்டேக்கில் டிவிட்டரில் ரஜினியை மோசமாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.