விஜயை பத்தி பேசினா ‘மூடிட்டுப் போ’ன்னு சொல்லுவாரு அஜித்!.. ரகசியத்தை பகிர்ந்த நடிகர்!..

Ajith Vijay: கோலிவுட்டில் மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ள நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்களுக்கு என மார்க்கெட்டில் ஒரு பெரிய வரவேற்பே இருந்து வருகிறது. போட்டி போட்டுக் கொண்டு இவர்களின் படங்கள் வெளியாகும் போது ரசிகர்களின் ஆரவாரத்திற்கு ஒரு எல்லையே கிடையாது. அந்த அளவுக்கு அஜித் ரசிகர்கள் ஆகட்டும் விஜய் ரசிகர்களாகட்டும் முண்டி அடித்துக்கொண்டு அந்தப் படத்தை எப்படியாவது ஓட வைத்து விடுகின்றனர்.

அப்படி ஒரு மாஸ் இருவருக்குமே ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தொழில் முனையில் போட்டிப் போட்டுக்கொண்டு இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இருவரும் நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள். விஜய் குடும்பத்தார் அஜித் வீட்டுக்கும் அஜித் குடும்பத்தார் விஜய் வீட்டிற்கும் சில நிகழ்ச்சிகளின் போது கலந்து கொள்கிறார்கள்.

இதையும் படிங்க: கோட் படத்தை கைவிட்ட கலாநிதிமாறன்!.. சாட்டிலைட் உரிமை மட்டும் இவ்வளவு கோடியா?!.

அவர்களுக்குள் இன்று வரை ஒரு நல்ல உறவு இருந்து வருகிறது. தேவையில்லாமல் ரசிகர்கள் தான் இவர்கள் பெயரைச் சொல்லி சண்டையிட்டு கொள்கிறார்கள். இந்த நிலையில் இருவருக்குமே நெருங்கிய நண்பர்களாக இருந்தது என்றால் இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணா. விஜய்யுடன் பிரண்ட்ஸ் திரைப்படத்தில் மட்டுமே நடித்திருந்தார் ரமேஷ் கண்ணா.

ஆனால் அஜித்துடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அஜித்தை வைத்து தொடரும் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் ரமேஷ் கண்ணா. இந்த நிலையில் விஜய் பற்றி அஜித்திடம் அடிக்கடி பேசுவாராம் ரமேஷ் கண்ணா. குறிப்பாக ‘விஜய் தான் பாலிடிக்ஸ் பக்கம் சென்று விட்டாரே. நீ எப்படி?’ என சும்மா கிண்டலாக கேட்பாராம் ரமேஷ் கண்ணா.

ramesh

ramesh

இதையும் படிங்க: வில்லன்கள் தான் நல்லது செய்வாங்களாம்… உலகநாயகனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..?

அதற்கு அஜித் மூடிட்டு போ என சொல்வாராம். பொதுவாக அஜித்துக்கு அரசியலில் ஆர்வமே கிடையாதாம். அரசியல் பேச்சை எடுத்தாலே அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டாராம். அரசியல் பற்றி அவருடைய ஒரே ஒரு பார்வை ஜனநாயக கடமையை ஆற்றுவது மட்டும்தான் என ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

 

Related Articles

Next Story