Home Cinema History அம்மா சொன்ன ஒரு வார்த்தை… இன்று வரை அதை செய்யாத ராம்கி

அம்மா சொன்ன ஒரு வார்த்தை… இன்று வரை அதை செய்யாத ராம்கி

actor ramki

தமிழ் திரையுலகில் 90-களின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராம்கி.

1987-ம் ஆண்டு வெளியான சின்னப் பூவே மெல்லப் பேசு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ராம்கி. பிரபுவுடன் இணைந்து நடித்த இந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. தொடர்ந்து பல படங்கள் நடித்தாலும் செந்தூரப்பூவே அவருக்கு மிகப்ப்ரிய வெற்றியை கொடுத்தது. பின்னர் வந்த இணிந்த கைகள், தொட்டில் சபதம், மருது பாண்டி என பல வெற்றிகளி கொடுத்தார். ராம்கிக்கு ஸ்பெஷலே அவரது தனித்துவமான ஹேர் ஸ்டைல்தான். தன்னுடன் நடித்த நடிகை நிரோஷாவை காதலித்து திருமணம் செய்தார் அவர். சமீபத்தில் வந்த லக்கி பாஸ்கர் படத்தில் அவரது கெரக்டர் அனைவராலும் பேசப்பட்டது.

இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த ராம்கி கூறியபோது, சின்ன வயதில் நான் சொந்தக்காரங்க வீட்டிற்கு சென்றபோது அவர்கள் வீட்டில் கலர் கலரா சிக்கன் 65 சமைத்து வைத்திருந்தார்கள். நான் அதை எடுத்து சாப்பிடும்போது ஏய் அதை தொடாதே என்று என் அம்மா சொல்வார்கள். என்னடா இது நன்றாக இருக்கிறதே, ஆனால் நம் அம்மா அதனை சாப்பிட விடமாட்றாங்களே அன்று நினைப்பேன். உடனே நான் ஏன் என்று என் அம்மாவிடம் கேட்டேன். அதற்கு என் அம்மா டேய் அதை எல்லாம் சாப்பிடக்கூடாது. ஒரு உயிரை கொன்று வைத்திருக்கிறார்கள்டா , இதனை சாப்பிட்டால் சாமி கண்ணை குத்திவிடும் என்று கூறுவார்கள்.அப்போது நான் சிறு வயது என்பதால் ஏதோ என் மனதில் பட்டுச்சு. அப்போதிலிருந்து இப்போது வரை நான் அசைவத்தை சாப்பிடுவது இல்லை என்று கூறியிருந்தார்.

Previous articleD55: SK கேங்கை மொத்தமா தூக்கிய தனுஷ்! ‘D55’ படத்தின் பூஜை கிளிக்ஸ்
Next articleலெஜெண்ட் சரவணாவ பாத்து விஜய் கத்துக்கணும்!.. இது செம மேட்டரு!…