Entertainment News
Biggboss Tamil 8: போட்டியாளராக உள்ளே செல்லும் ‘சர்ச்சை’ ஹீரோ?
ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 வருகின்ற அக்டோபர் மாதம் கடைசியில் தொடங்குகிறது. இதற்கான ப்ரோமோ ஷூட் ஈவிபி சிட்டியில் தற்போது படம் பிடிக்கப்பட்டு வருகிறது.
கமல்ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி இந்தாண்டு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவிருக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
இந்தநிலையில் கவுண்டம்பாளையம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள ரஞ்சித், இந்த சீசனில் போட்டியாளராக உள்ளே செல்ல இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ் சினிமாவில் நல்ல ஒரு நடிகராக திகழ்ந்த ரஞ்சித் சமீபகாலமாக தெரிவித்து வரும் கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது அவர் போட்டியாளராக உள்ளே சென்றால் இது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரும் டிஆர்பியை அளிக்கும்.
எனவே பிக்பாஸ் தயாரிப்பு நிறுவனம் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறதாம். விரைவில் அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் வெளியாகும் என தெரிகிறது.
ரஞ்சித் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வாரா? என்பதை நாம் வழக்கம் போல பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.